தீபாவளி பண்டிகையையொட்டி அளிக்கும் விடுமுறையில் சுற்றுலா செல்ல விரும்பினால், நீங்கள் இங்குக் குறிப்பிடப்படவுள்ள இடங்களுக்குப் பயணிக்கலாம். அழகான கடற்கரைகளில் தொடங்கி கலாச்சார தொடர்புகள் அதிகமுள்ள இடங்களைக் கண்டுகளிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இது மறக்க முடியாத பயணமாக அமையும். நல்ல திட்டமிடல் இருந்தால் போதும், இந்த வார விடுமுறையை உங்களது அன்புக்குரியவர்களுடன் செலவழித்து புத்துணர்ச்சி பெறலாம்.
தீபாவளி பண்டிகைக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில், இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. வாரத்தின் இறுதியில் தீபாவளி வருவதால், பண்டிகையை மிகுந்த ஆவலுடன் பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர். நவம்பர் 12ஆம் தேதி அதாவது ஞாயிறன்று தீபாவளி வருவதால் நீண்ட தூரம் பயணிக்க விரும்பும் நபர்களுக்கு, இது நல்ல வாய்ப்பாகும். உடனடியாகத் திட்டமிட்டு காதல் உறவுடனோ அல்லது அன்புக்குரியவர்களுடனோ இனிமையான சுற்றுலா செல்ல இதுவே சரியான சந்தர்ப்பம். இந்தத் தீபாவளி மறக்க முடியாத ஒன்றாக அமைவதற்கு உங்களுக்காகச் சில பயண திட்டங்களை எடுத்துரைக்கிறோம்.
வாரணாசி :
இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் என்றழைக்கப்படும் வாரணாசி, தீபாவளி பண்டிகையின்போது சுற்றுலா செல்வதற்கான உகந்த இடமாகும். கங்கை நதியின் கரைகளில் களிமண் விளக்குகள் ஏற்றப்பட்டு, கண்கவர் வாணவேடிக்கைகள் அரங்கேறும். தீபாவளியின்போது கங்கா மலைத்தொடர்கள் தவிர்க்க முடியாதவையாக அமைகின்றன. அதேநேரத்தில் பண்டிகை நாளில் நகரில் நடைபெறும் கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளிலும் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கலாம். வாணவேடிக்கை நிகழ்ச்சியானது உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். குறிப்பாகத் தேவ் தீபாவளியை தவிர்த்துவிடாதீர்கள். வாரணசாயில் தேவ் தீபாவளியை கடவுள்களின் தீபாவளி என்று அழைக்கின்றனர். வாரணாசியை சுற்றியுள்ள மலைத்தொடர்களில் லட்சக்கணக்கில் விளக்குகள் ஏற்றப்பட்டு, இந்துத் தெய்வங்கள் பேரணியாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
அயோத்தியா :
இராம பிரானின் பிறப்பிடமான அயோத்தியா, தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஏற்ற இடமாகும். இங்கு வசிக்கும் பொதுமக்கள் தீபாவளியை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். ஏறக்குறைய நான்கு நாட்களுக்கு நகரம் முழுவதும் விளக்குகள் மற்றும் வண்ண வண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்படும். உத்தரபிரதேச மாநிலத்தில் பாயும் சராயு நதிக்கரையில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு விளக்குகளை ஏற்றித் தீபாவளியை கொண்டாடுவார்கள். இது கின்னஸ் சாதனை நிகழ்வாகவும் பதிவாகியுள்ளது. ஒருமுறை தீபாவளி பண்டிகையின்போது சுமார் மூன்று லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டன.
கேரளா :
இந்தத் தீபாவளி மறக்கமுடியாத ஒன்றாக அமைய வேண்டுமானால், உங்கள் காதல் உறவுடன் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்களில் கேரளாவும் ஒன்று. கேரள மாநிலம் அதன் இயற்கை அழகிற்காகவும், வண்ணமயமான பழக்கவழக்கங்களுக்குப் பெயர் பெற்ற மாநிலமாகும். கலாச்சார மற்றும் பாரம்பரிய கொண்டாட்டங்களின்போது அனைவரையும் மயக்கும் அதிசய பூமியாகக் கேரளா மாறும். இதனாலேயே கடவுளின் சொந்த நகரமான கேரளாவும், தீபாவளி கொண்டாட்டத்திற்கு மிகச்சரியான இடமாகும்.
ராஜஸ்தான் :
ராஜஸ்தானில் தீபாவளி பண்டிகை ஒரு கலாச்சார பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. அதனாலேயே பிற இடங்களைக் காட்டிலும் ராஜஸ்தானில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் விரிவானதாக இருக்கும். ஜெய்ப்பூர் சிட்டி பேலஸ், ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனை மற்றும் உதய்பூரில் உள்ள பிச்சோலா ஏரியில் அரங்கேறும் வானவேடிக்கைகளின் சத்தம் வானிற்கே கூடுதல் அழகூட்டும். அதேநேரம் ராஜஸ்தானில் உள்ள பாலைவன குன்றுகள், பாரம்பரிய இடங்கள், கட்டிடக்கலைகளை கண்டுகளிக்க தீபாவளி விடுமுறைய பயன்படுத்திக் கொள்ளலாம்.
மைசூரு :
கர்நாடகாவின் கலாச்சார மையம் என்றழைக்கப்படும் மைசூருவும், தீபாவளி விடுமுறையின்போது காதலர்கள் சுற்றுலா செல்வதற்கான உகந்த இடமாகும். இந்தப் பயணத்தின்போது மைசூரு அரண்மனை, சாமுண்டேஷ்வரி கோயில், பிருந்தாவன் கார்டன் உள்ளிட்ட இடங்களுக்குக் கட்டாயம் செல்லுங்கள். இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image source : Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]