சோழர்களின் வரலாறு 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்களை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து தொடங்குகிறது. 13ஆம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 5 நூற்றாண்டுகளுக்கு சோழர்களின் ஆட்சி தொடர்ந்துள்ளது. ஏனினும் 2ஆம் நூற்றாண்டிலேயே ஆந்திர மாநிலத்தில் சோழ ராஜ்யத்தின் அடையாளங்கள் உள்ளன. சோழர் ஆட்சியில் காந்தமன் முக்கியமானவர்களின் ஒருவராக கருதப்படுகிறார். சோழர்களின் காலம் சங்க இலக்கியங்களின் பொற்காலம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதன் பிறகு வந்த சோழர்கள் ஆட்சியை விரிவுபடுத்துவதிலும், தங்களுடைய பகுதிகளில் வளர்ச்சியை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தினர். முதலாம் பராந்தக சோழன், முதலாம் ஆதித்ய சோழனுக்கு பிறகு ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் கடல் கடந்தும் ஆட்சியை விரிவுபடுத்தினர். குலோத்துங்க சோழன் கலிங்கர்களை எதிர்கொண்டு ஆட்சியை மேலும் வலுப்படுத்தினர். சோழர்களின் மகத்தான ஆட்சி 13ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை நீடித்தது. பாண்டியவர்களின் வருகையால் தமிழ் மண்ணில் நிலைமை மாறியது. இந்த பதிவில் சோழ சாம்ராஜ்யத்தின் தொடக்கம், முக்கிய மன்னர்கள், கலை, இலக்கிய மேம்பாடு குறித்து பார்க்கலாம்.
சோழப் பேரரசை உருவாக்கியவர் விஜயாலய சோழன். 8ஆம் நூற்றாண்டில் தஞ்சையை வசப்படுத்தி சோழர்களின் எழுச்சியை உருவாக்கினார். பல்லவர்கள் தோற்கடிப்பட இவரே முக்கிய காரணம். அதன் பிறகு சோழ பேரரசின் தலைநகராக தஞ்சை அறிவிக்கப்பட்டது.
விஜயாலய சோழனுக்கு பின் சோழ பேரரசிற்கு ஆதித்ய சோழன் பொறுப்பேற்றார். அபரஜித்த மன்னனை வீழ்த்தி பெரும் வலிமை பெற்றார். பாண்டியர்களையும், பல்லவர்களையும் எதிர்த்து வெற்றிகளை குவித்தார்.
முதலாம் ராஜராஜ சோழனுக்கு பின் அரியணை ஏறிய ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழன் என அழைக்கப்பட்டான். இவருடைய ஆட்சி காலம் சோழர்களின் பொற்காலம். இவருக்கு பிறகு சோழ சாம்ராஜயம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தது.
சோழர்களின் ஆட்சியில் சமூகமும், கலாச்சாரமும் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டது. சமூக மற்றும் மத சந்திப்புகளுக்கு கோவில் முக்கிய இடமாக விளங்கியது. கோவில் பகுதியில் மாணவர்களுக்கு வேதங்கள், புனித நூல்கள் குறித்து பாடம் எடுக்கப்பட்டது. போர் தந்திரம் குறித்து ஆலோசிக்கவும் கோவிலை பயன்படுத்தினர். பெரும்பாலான மக்கள் சிவனை வழிபட்டனர். திருப்பதியில் சோழர்கள் குறித்து சில தகவல்களும் உள்ளன.
கலை, இலக்கியம், மதம் சோழர்களின் ஆட்சியில் பெரும் பலனடைந்தன. காவிரி நதிக்கரையில் ஏராளமான சிவன் கோவில்கள் கட்டப்பட்டன. தஞ்சை பொற்கோவில் உலகிலேயே மிக அபூர்வமான சிவன் கோவில் ஆகும். சோழர் காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கோவில்களுக்கு உலகளவில் பாரம்பரிய தளம் அங்கீகாரம் கிடைத்துள்ளது. பிற மத இலக்கியங்களுக்கும் சோழர் ஆட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. நாலாயிர திவ்ய பிரபந்தம் இன்று வரை பல இடங்களில் கற்பிக்கப்பட்டு வருகிறது.
சோழர்கள் ஆட்சி செய்த நிலப்பரப்பு மிகப்பெரிது என்றாலும் அனைத்தையும் ஒற்றை குடை நிர்வாகத்திற்கு கொண்டு வந்தனர். திருச்சி, திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, விருத்தாசலம், பிச்சாவரம், தஞ்சை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளை சோழர்கள் ஆட்சி செய்தனர். மண்டலங்கள் பிரிக்கப்பட்டு சிறப்பான ஆட்சி வழங்கிட ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். மண்டலங்களை மாவட்டங்களை பிரித்து வளார்ச்சியை மேம்படுத்தினர். கலை, இலக்கியம், நாடகம், கவிதை ஆகியவற்றில் சோழர்கள் பெரும் ஆர்வம் காட்டினர். தமிழகத்தில் எண்ணற்ற கோவில்கள் இருப்பதற்கு சோழர்களின் பங்களிப்பு மிகப்பெரியது.
சோழர்களின் ஆட்சி அசுர வளர்ச்சியை நோக்கி பயணித்த காலமாகும். இன்றைய ஆட்சியாளர்கள் பல விஷயங்களை சோழ பேரரசிடம் இருந்து கற்று கொள்ளலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]