கிறிஸ்துமஸ் தாத்தா என்றால் குழந்தைகள் அனைவருக்கும் பிடிக்கும். காரணம் அவர் பை முழுக்க சாக்லேட்ஸ் மற்றும் பரிசு பொருட்களை வைத்திருப்பார். கிறிஸ்துமஸ் காலத்தில் நமக்கு பிடித்த பரிசு பொருட்களை கேட்டால் சாண்டா தாத்தா கொண்டு வந்து தருவார் என்று கூறுவது ஐதீகம். ஆனால் இந்த சாண்டா தாத்தா ஒரு கற்பனை கதாபாத்திரமா இல்லை உண்மை நபரா என்பது பலரின் கேள்வியாக உள்ளது. அந்த வரிசையில் சாண்டா தாத்தா யார் என்றும் கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய வரலாறு குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
யார் இந்த சாண்டா தாத்தா?
1822 ஆம் ஆண்டு கிளமென்ட் மூர் என்பவர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய இரவு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி அவர் வர்ணித்துள்ளார். இதனை தொடர்ந்து அது பத்திரிகைகளில் வெளியாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. கிளமென்ட் மூர் எழுதிய ஜிங்கிள் பெல் கவிதையில் நிக்கொலசை ஹீரோவாக வடிவமைத்து அவரின் புகழ் அமெரிக்கா முழுவதும் பரவ முக்கிய காரணமாயிற்று. அன்றைய நாள் முதல் சிவப்பு மற்றும் வெள்ளை டிரஸ் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாக மாறிவிட்டது. இதனால் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா இருந்து வருகிறார்.
செயின்ட் நிக்கோலஸ்:
நான்காம் நூற்றாண்டில் ஆசியா மைனர் என்ற பகுதியில் (இது இன்றைக்கு துருக்கி என்று அழைக்கப்படுகிறது) ஒரு பணக்கார பெற்றோருக்குப் பிறந்த குழந்தை தான் செயின்ட் நிக்கோலஸ். இயேசு கிறிஸ்துவின் வார்த்தைபடி, "உனக்கு சொந்தமானதை விற்று பணத்தை ஏழைகளுக்குக் கொடு" என்பதற்கு கீழ்ப்படிந்து, நிக்கோலஸ் தனது பெற்றோர்களை விட்டுச்சென்ற தன் சொத்து முழுவதையும் ஏழை மக்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவ பயன்படுத்தினார். இதனால் அவர் ஒரு அதிசய மனிதராக பார்க்கப்பட்டார். மேலும் அந்த காலத்தில் யாரேனும் ஒரு நபர் ஒரு ரகசிய பரிசைப் பெறும்போதெல்லாம், அது நிக்கோலஸிடமிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் நிஜ வாழ்க்கை சாண்டா தாத்தா என்று அழைக்கப்பட்டார்.
பரிசு தரும் சாண்டா:
இன்றைய காலகட்டத்தில் பல கம்யூனிஸ்ட் நாடுகள் கூட கிறிஸ்துமஸ் பண்டிகையில் சாண்டா தாத்தாவை அங்கீகரித்து வருகின்றனர். முதன் முதலில் டச்சு நாட்டு மக்கள்தான் கிறிஸ்துமஸ் தாத்தாவை சாண்டா கிளாஸ் என்று அழைத்தனர். ஆனால் உண்மையான கிறிஸ்துமஸ் தாத்தாவின் பெயர் செயின்ட் நிக்கோலஸ். அவரின் தாராள மனம், அன்பு, குழந்தைகளிடம் அதிக விருப்பம் ஆகிய நல்ல குணங்களுக்கு பெயர் பெற்றவர் இந்த செயின்ட் நிக்கோலஸ். கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று ஒரு பணி வண்டியில் பறந்து வந்து வீடுகள் வெளியே குழந்தைகளுக்கு பரிசுகள் வைத்து செல்வார் இந்த சாண்டா தாத்தா என்பது குழந்தைகளின் நம்பிக்கை. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் சாண்டா தாத்தாவை எதிர்ப்பார்த்து பல குழந்தைகள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவது உண்டு.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation