Yogi Babu : விஜய் சேதுபதி முதல் குஷ்பு வரை! முன்னணி பிரபலங்கள் கலந்துக்கொண்ட யோகி பாபு மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட விழா..

நடிகர் யோகி பாபு தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியிருக்கிறார். 

 
yogi babu daughter birthday

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக யோகி பாபு திகழ்ந்து வருகிறார். ஹீரோயின் இல்லாமல் கூட படம் எடுப்பார்கள் ஆனால் யோகி பாபுவின் காமெடி இல்லாமல் எந்த ஒரு படமும் இருக்காது. சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்திலும் நடித்திருந்தார்.தற்போது பல முன்னணி நடிகர்களின் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகர் யோகி பாபுவுக்கு 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் யோகி பாபு மகளின் முதல் பிறந்ந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியிருக்கிறார். இந்த கொண்டாட்ட விழா நட்சத்திர ஹோட்டலில் நடைப்பெற்றுள்ளது.

இந்த பிறந்தநாள் செலிபிரேஷனில் விஜய் சேதுபதி, சூர்யா, உதயநிதி ஸ்டாலின், டி ராஜேந்தர், நடிகர் பார்த்திபன், இயக்குனர் அமீர் மற்றும் பல முன்னணி நடிகர்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தியுள்ளனர். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், குஷ்பு ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

comedian yogi babu

யோகி பாபு மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP