herzindagi
actress  tamanna diet

Tamanna Bhatia Diet : தமன்னாவின் டயட் ரகசியம் என்ன தெரியுமா?

நடிகை தமன்னா பாட்டியா மிகச் சிறந்த ஃபேஷன் ஐகானிக்காக திகழ்கிறார். அதற்கு சமமாக ஃபிட்னஸிலும் தமன்னாவை அடித்து கொள்ள ஆள் இல்லை. அதற்கு அவர் பின்பற்றும் டயர் பிளான் என்ன தெரியுமா? அதுக் குறித்து பார்க்கலாம் வாருங்கள். 
Editorial
Updated:- 2023-05-09, 09:32 IST

நடிகை நமன்னாவுக்கு ஃபிட்னஸ் என்பது அவரின் அன்றாட பழக்கம். உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள தமன்னா பின்பற்றும் ஃபிட்னஸ் ரகசியங்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள். எப்போதுமே நடிகர், நடிகைகளின் டயட், வொர்க்கவுட் பிளான் ஆகியவற்றை த்ரிந்து மோள்ள நம்மில் பலரும் ஆர்வம் காட்டுவோம்.

உடலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் ஃபிட்டாகவும் வைத்து கொள்ள அவர்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை டெஹ்ரிந்து கொள்ள யாருக்கு தான் பிடிக்காது. அந்த வகையில் இந்த பதிவில் மில்க் பியூட்டி தமன்னாவின் டயட் பிளான் மற்றும் வொர்க்கவுட் குறித்து பார்க்கா போகிறோம்.

இந்த பதிவும் உதவலாம்:நயன்தாரா உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா?

தமன்னாவின் உடற்பயிற்சி

தமன்னா தனது உடலை ஃபிட்டாக வைத்து கொள்ள எடை தூக்குதல், ஏபிஎஸ், க்ரஞ்சஸ் போன்ற பல்வேறு உடற்பயிற்சிகளை மேற் கொள்கிறார். தினமும் காலையில் யோகா செய்வதை தமன்னா வழக்கமாக வைத்துள்ளார். இத்துடன் சில சமயங்களில் தமன்னா, பில்டேஸ் மற்றும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகளையும் செய்கிறார். தமன்னா ஒவ்வொரு நாளையும் பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் நல்ல எண்ணங்களுடன் தொடங்குகிறார். இதனால் மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.

tamanna insta

தமன்னாவின் டயட் பிளான்

தமன்னா, அதிகமாக சாப்பிட்ட பிறகு கலோரிகளை எரிக்க வியர்வை வடிய ஜிம்மில் கூடுதல் உடற்பயிற்சிகளை செய்கிறார்.தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை தமன்னா வழக்கமாக வைத்துள்ளார். இதனுடன் ஜூஸ் மற்றும் சூப் வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்.வீட்டில் செய்யும் உணவுகளை விரும்பி சாப்பிடும் தமன்னா, காலை உணவில் முட்டை மற்றும் காய்கறிகள் , மதிய உணவில் பருப்பு வகைகள், சிவப்பு அரிசி போன்றவற்றை எடுத்துக்கொள்கிறார். இது தவிர, மதிய உணவில் கட்டாயம் தயிரை எடுத்து கொள்கிறார்.

தமன்னா ஜிம்மில் அதிக நேரத்தை செலவிடுகிறார். தினமும் 1 மணிநேரம் ஜிம்மில் பலவிதமான உடற்பயிற்சிகளை செய்து தமன்னா தனது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்கிறார்.

இந்த பதிவும் உதவலாம்:அம்மி, மண்பானை சமையல் துர்கா ஸ்டாலின் வீட்டு கிச்சன் இவ்வளவு சிம்பிளா!

உங்களுக்கும் தமன்னா போல் ஃபிட்டாக இருக்க வேண்டுமென்றால் அவரின் உடற்பயிற்சி முறை மற்றும் உணவு முறைகளை பின்பற்றலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]