சினிமா பிரபலங்கள் பலரும் சொகுசு கார்கள், சொகுசு பங்களா வீடுகள், விலையுர்ந்த பொருட்களை அதிகமாக வைத்திருப்பார்கள். அந்த லிஸ்டில் தற்போது பிரைவேட் ஜெட்டும் இணைந்து விட்டது. தங்கள் வசதிகேற்ப பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் பழக்கமும் தற்போது பெருகி விட்டது. அந்த வகையில் இந்த பதிவில் பல கோடி ரூபாயில் சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் தென்னிந்திய சினிமா பிரபலங்கள் பற்றி பார்ப்போம்.
நயன்தாரா
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது தனிப்பட்ட தேவைக்காக பிரைவேட் ஜெட் சொந்தமாக வாங்கி வைத்துள்ளார். நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் அடிக்கடி பிரைவேட் ஜெட்டில் பயணம் செய்யும் படங்கள் வெளியாகியுள்ளன.
பிரபாஸ்
தெலுங்கு நடிகர் பிரபாஸ் கோடிகளில் சம்பளம் வாங்கக்கூடியவர். பிரபாஸும் சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ளார்.
அல்லு அர்ஜுன்
புஷ்பா நடிகர் அல்லு அர்ஜுன் 6 இருக்கைகள் கொண்ட பிரைவேட் ஜெட்டை சொந்தமாக வைத்துள்ளார். தனது மனைவி சினேகா ரெட்டி, குழந்தைகளுடன் அடிக்கடி பயணம் மேற்கொள்வார்.
அக்கினேனி நாகார்ஜுனா
தெலுங்கு சூப்பர் ஸ்டார் அக்கினேனி நாகார்ஜுனா தனியார் ஜெட் விமானத்தை வைத்துள்ளார். குடும்பத்துடன் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் போது இதை பயன்படுத்துவார்.
மகேஷ் பாபு
தெலுங்கு மெகா ஸ்டார் மகேஷ் பாபு சொந்தமாக பிரைவேட் ஜெட் விமானத்தை வைத்திருக்கிறார், அதில் அவர் மனைவி நம்ரதா ஷிரோத்கருடன் அடிக்கடி பயணம் செய்வார்.
சிரஞ்சீவி
தனது தனிப்பட்ட பிரைவேட் ஜெட் விமானம் மூலம் பல இடங்களுக்கு செல்வது நடிகர் சிரஞ்சீவிக்கு மிகவும் பிடிக்குமாம்.
ஜூனியர் என்டிஆர்
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் ரூ.80 கோடி செலவில் ஒரு தனியார் ஜெட் விமானம் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
பவன் கல்யாண்
தனது அரசியல் பயணத்திற்காகவே தனி பிரைவேட் ஜெட் விமானம் வைத்திருக்கிறார் நடிகர் பவன் கல்யாண
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation