உலக அளவில் இருக்கும் தமிழர்களின் ஆதரவால் லியோ படம் ஆடியோ ரிலீஸ் ஆகாமலே ட்ரெயிலர் பெரும் அளவில் மக்களைச் சென்றடைந்துள்ளது. மாஸ் ரெக்கார்டினை லியோ உறுதி செய்துள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் படம் என்றாலே அதிக வருமானத்தை ஈட்டி தரும் அதற்கு லியோ மற்றும் விதிவிலக்கல்ல. லியோ படம் பெருமளவில் மக்களால் பேசப்பட்ட வருகின்றது. தமிழ் சினிமாவில் லியோ ஆடியோ ரிலீஸ் நிறுத்தப்பட்டது பெரும் பேசு பொருளாக இருந்தது.
விஜயின் லியோ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை பெற்று மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. லியோ ஆடியோ ரிலீஸ் நிறுத்தப்பட்டாலும் படத்திற்கான ட்ரெய்லர் வெளியான 20 நிமிடங்களில் ஒரு மில்லியன் லைக்குகளை வாங்கி இருக்கின்றது. தற்போது வரை லியோ ட்ரெய்லர் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று 5 மில்லியன் லைக் வரை பெற்றுள்ளது.
லியோ ட்ரெய்லர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள லியோ ட்ரெய்லர் பல்வேறு முகங்களை நமக்குக் காட்டி இருக்கின்றது. இந்தப் படம் எப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று சோசியல் மீடியாவில் ஆளுக்கு ஒரு கதைகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் லியோ மாஸ் ஹிட்டுதான் என்பதை நாம் இப்போது உறுதியிட்டுக் கூறலாம் லியோவுக்கு என்று எதிர்பார்ப்பு மற்றும் அரசியல் தலையீடுகள் இருப்பதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
லியோ ட்ரெய்லர் ஒரு பார்வை டிரெய்லரின் ஆரம்பத்தில் சீரியல் கில்லர் போல் ஒருவரை சுடுவது மற்றும் அதிக இறப்புகள் இவற்றையெல்லாம் எதிர்த்துப் போலீஸ் அதிகாரி ஒருத்தர் துப்பாக்கியில் சுட போகின்றார், இந்த இடத்தில் விஜயின் டயலாக்குகள் ரசிகர்களைப் பெறும் கொண்டாட்டத்தைக் கொடுத்து இருக்கின்றது. சஞ்சய் தத் ட்ரெய்லரில் முக்கிய இடத்தைப் பெறுகின்றார். அவர் பேசும் ‘ஊரை ஏமாற்றலாம், உலகத்தை ஏமாற்றலாம் ஆனால் என்னை ஏமாற்ற முடியாது, என்ற வசனம் ட்ரெய்லரின் முக்கிய பங்கு பெற்றிருக்கிறது. ட்ரெய்லரில் இன்னொரு முக்கியமான ஆளாகக் கௌதம் வாசுதேவ் மேனன் வசனம் இடம் பெற்றிருக்கிறது. அந்த வசனம் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது. ‘ இல்லை ஈசல் கூட்டம் மாதிரி உன்னைத் தேடி வந்துகிட்டே தான் இருப்பானுங்க நீ இங்கே இருக்க கூடாது, நீ இங்கே இருக்க கூடாது, உனக்குத் தான் ஆபத்து’ என்ற வசனங்கள் தெறிக்க விடுகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் விஜய் நடிப்பில் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகிக் கோடான கோடி மக்களின் ஆதரவை பெற்றிருக்கின்றது. இந்த ட்ரெய்லர் மிகவும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. அனிருத் அமைத்துள்ள பின்னணி இசை யானது நம்மை மிகுந்த பரபரப்பை உண்டாக்க செய்கின்றது. கதையுடன் நகர்ந்து செல்ல இசை மிகுந்த பக்கபலமாக இருக்கின்றது. ட்ரைல்ரின் மூன்று நிமிட காட்சி என்றாலும் ஒவ்வொரு பிரேமையும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். லியோ ட்ரைலர் ஒரு அலசு அலசுவோம் வாங்க.
பத்திரிகையாளர் சந்திப்பில் முகத்தை மூடியவண்ணம் விஜய் நகர்ந்து செல்கின்றார். மேலும் லியோ படத்தில் பிரியா ஆனந்த் கதாபாத்திரம் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார் என்று தெரிய வருகின்றது.
லியோ ட்ரெய்லரில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகப் போலீஸ் கதாபாத்திரம் கௌதம் பாசமே வாசுதேவன் செய்திருக்கின்றார். இரண்டு விஜய் இருப்பார்கள் என்று கதை சொல்கின்றது. மேலும் திரில்லிங்கான கதையாக இருக்கும் என்றும் தெரிகின்றது. சஞ்சய் தத் நடிப்பு டயலாக் தெரிய வருகின்றது. மேலும் இப்படத்தை வலுப்படுத்த அர்ஜுனுக்கு முக்கிய பங்கு இருக்கும். மிகுந்த சண்டை காட்சிகள், ஆக்சன், திரில்லிங், குடும்பம் பாச போராட்டம் ஆகியவை இணைந்த லியோ தீபாவளிக்கு முன்பே ஒரு நல்ல ட்ரீட்டாக ரசிகர்களுக்கு இருக்கும்.
லியோ ட்ரெய்லர் வெளியிடானது நிமிடத்திற்கு நிமிடம் மக்களால் ரசிக்கப்பட்டு லைக்குகள் கொடுக்கப்பட்டு கொண்டாடப்பட்ட வருகின்றது வெறித்தனமாக ரசிகர்கள் லியோவை ரசித்து வருகின்றனர் ஆடியோ ரிலீஸ் இல்லை ஆனால் ட்ரெய்லருக்கு மட்டுமே ஒரு இருபது நிமிடத்தில் 1 மில்லியன் லைட்டைகளை பெற்றது தற்போது 5 மில்லியனுக்கு மேல் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
மேலும் படிக்க: பட்டையைக் கிளப்பும் பேடாஸ் லியோதாஸ் பாடல் ரிலீஸ்
ஏற்கனவே ஆடியோ ரிலீஸ் நிறுத்தப்பட்டதை அடுத்து விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்தனர். லியோ ட்ரெய்லர் சென்னை திரையரங்குகளில் ஒளிபரப்பானது. ரசிகர்கள் ஆர்வத்தின் மிகுதியால் அங்கிருந்த தடுப்புகளை உடைத்து வெறித்தனமாகக் கோஷமிட்டனர். கொண்டாட்டமாக லியோ ட்ரெய்லரை வரவேற்றனர். 300 கோடி பட்ஜெட்டில் லியோ படம் உருவாகி இருக்கின்றது. இந்தப் படம் லோகேஷ்- விஜய் இணைந்து படமாக இருப்பதால் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பானது நிறைந்து காணப்படுகின்றது.
லியோ சாயலை பார்க்கும்போது நமது மரண மாஸ் ஹீரோ ஜாக்கிசான் நினைவுக்கு வருகின்றார். என்னமோ ஏதோ தெரியவில்லை ஆனால் ஃபைட் சீக்குவன்ஸ் பின்னணி இசை கேட்கும் போதெல்லாம் விஜயின் இந்தக் கெட்டப் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்று நினைக்கத் தோன்றுகிறது ஆக மொத்தம் லியோ பக்கா என்டர்டெயின்மென்ட் மூவியாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
image source: Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]