herzindagi
Kgf Hero next movie

Yash 19 : ஆக்‌ஷன் அதிரடி நிறைந்த “டாக்ஸிக்” ! டைட்டில் அறிவிப்பில் இதை கவனித்தீர்களா ?

கே.ஜி.எப் படங்களின் வெற்றியை தொடர்ந்து கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் எனும் படத்தில் நடிக்கிறார் ராக்கி என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் யஷ்
Editorial
Updated:- 2023-12-12, 21:51 IST

பிரசாந்த் நீலுடன் இணைந்து கே.ஜி.எஃப் 1, 2 என மாபெரும் வெற்றி படங்களைக் கொடுத்த கன்னட நடிகர் யஷ் அடுத்து யாருடன் இணைந்து பணியாற்ற போகிறார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

கே.ஜி.எஃப் 1 திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அப்படியே இரண்டாம் பாகத்திற்கு கடத்தி அதில் வெற்றியும் கண்டார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யஷ்-ஐ தவிர வேறு யாரும் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் நிச்சயம் இவ்வளவு பொறுத்தமாக இருந்திருக்காது. தமிழ்நாட்டில் பீஸ்ட்டை விரட்டியடித்து நடிகர் விஜய்யின் மார்க்கெட்டையும் தவிடு பொடியாக்கியது கே.ஜி.எஃப் திரைப்படம்.

Actor Yash

இதையடுத்து யஷ் தங்களது தயாரிப்பில் நடிக்க வேண்டும் பல நிறுவனங்கள் மல்லுக்கட்டின. ஆனால் யஷ் மிகவும் நிதானமாக இருந்தார். அவசர அவசரமாக எதையும் முடியும் செய்யாமல் அமைதி காத்தார். கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14ஆம் வெளியான நிலையில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கதை தேர்வில் கவனம் செலுத்தி தற்போது புதிய படத்தை அறிவித்துள்ளார்.

மேலும் படிங்க Top 10 Movies of 2023 : ஐ.எம்.டி.பி டாப் 10 மூவிஸ் - ஓப்பன்ஹெய்மர் முதலிடம்!

கீது மோகன்தாஸ் இயக்கிவிருக்கும் இப்படத்திற்கு டாக்ஸிக் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது யஷ்றிகு 19ஆவது படமாகும். இந்தப் படத்திலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. டைட்டில் ரிவீல் காணொளிக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் குரல் கொடுத்திருக்கிறார்.

toxic movie

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் படப்பிடிப்பை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10 தேதி டாக்ஸிக் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காணொளியில் யஷ் தோற்றம் வித்தியாசமாக உள்ளது.

மேலும் படிங்க Top 10 Theatrical Movies : ஐ.எம்.டி.பி டாப் 10 படங்களில் ஜெயிலர், லியோ

கே.ஜி.எஃப் திரைப்படத்தைப் போல இப்படமும் மாபெரும் வெற்றி பெறுமா என்பதை அறிய 2025 வரை காத்திருக்க வேண்டும்.  

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]