
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு சூரரைப்போற்று திரைப்படம் வெளியானது. கொரோனா காலத்தில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகததால் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 5 தேசிய விருதுகளையும் பெற்றது. நடிகர் சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார், படத்தின் கதாநாயகியான அபர்ணா பாலமுரளி பொம்மி கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.
சூரரைப்போற்று வெற்றி கூட்டணியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இந்நிலையில் சூர்யா 43வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் . படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம் மற்றும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோரும் ஒப்பந்தமாகியுள்ளார். துல்கர் சல்மான்,சூர்யாவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.எனவே சூர்யா- துல்கர் கூட்டணியை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ‘புறநானாறு’ என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த பதிவும் உதவலாம் : மகளின் நிச்சயதார்த்தம் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்ட நடிகை ராதா!

படத்தின் அறிவிப்பை கிளிம்ப்ஸ் வீடியோ மூலம் படக்குழு அறிவித்துள்ளது.அந்த வீடியோ தற்போது இணைத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்தை இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் மீனாட்சி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]