தமிழ் சினிமாவில் 1980 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா.1991 ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்பு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. ஜோடி நம்பர் ஒன், கலக்க போவது யாரு என ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார்.
நடிகை ராதாவுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனும் இருக்கின்றனர். ராதாவின் மூத்த மகள் கார்த்திகா ‘கோ’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து ‘அன்னக்கொடி’ என்ற படத்தில் நடித்தார். இவர் மலையாள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். கார்த்திகாவுக்கு தற்போது 31 வயதாகிறது. இந்நிலையில் நடிகை கார்த்திகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்த பதிவும் உதவலாம் :விஜய் சேதுபதி முதல் குஷ்பு வரை! முன்னணி பிரபலங்கள் கலந்துக்கொண்ட யோகி பாபு மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட விழா..
இது குறித்து நடிகை ராதா நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்து இருக்கிறார்.அதில் ‘விரைவில் ஒரு புதிய குடும்பத்திற்கு நாங்கள் எங்களுடைய பெண்ணை கொடுக்கிறோம். மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உங்களுக்காக இந்த அழகான குடும்பத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக என்னை அதிர்ஷ்டசாலி என்று சொல்ல முடியாது. திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வதைப் பற்றியது என்று நான் நம்புகிறேன். என் இதயம் இப்போது பல கலவையான உணர்வுகளுடன் இயங்குகிறது. எந்த தாயும் விரும்பும் சிறந்த மகள் கார்த்திகா. நீங்கள் எங்கள் குடும்பங்களுக்கு சிறந்த பரிசாக இருந்தீர்கள். நீங்கள் கொடுத்த இந்த அற்புதமான அனுபவத்திற்கு நன்றி’என்று பதிவிட்டுள்ளார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation