தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக பிரபல சமூல வலைதளமான இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்கிறார். நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில் இருந்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் “சந்திரமுகி” படத்தில் இணைந்து நடித்தார். இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அவர் நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன. ரஜினிகாந்த், விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார் நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடனுடன் இணைந்து ப்ளாக்பஸ்டர் படம் தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார்.
கதாநாயகர்களுக்கு சமமாக பெண் கதாப்பாத்திரங்களை மையமாக கொண்ட கதைகளில் அவர் நடித்த, மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்கள் ப்ளாக்பஸ்டர் படங்களாக வெற்றி பெற்றன. கதாநாயகர்களுக்கு இணையாக நயன்தாராவிற்கென தனி மார்க்கெட் உருவானது. அனைவராலும் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்பட்டார் நயன்தாரா. 20 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகின் முடிசூடா ராணியாக விளங்கி வருகிறார் நயன்தாரா. தற்போது பாலிவுட் கிங் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் பிரமாண்ட பான் இந்திய திரைப்படமாக உருவான ஜவான் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.
இந்த பதிவில் பார்க்கலாம் : கெத்து லுக்கில் நடிகை பிரணித்தா! வைரல் போட்டோ ஷூட்..
தற்போது தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் முதல் போஸ்டே தனது ட்வின்ஸ் குழந்தைகளும் பதிவிட்டார்.இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் 20க்கும் மேற்பட்ட பிரபலங்களை ஃபாலோ செய்து வருகிறார். அந்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா ? ஷாருக்கான், ஆலியா பட், தீபிகா படுகோன், சமந்தா, அனுஷ்கா ஷர்மா, அனிருத், மிஷெல் ஒபாமா மற்றும் பல பிரபலங்களை ஃபாலோ செய்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கியதிலிருந்து நடிகை நயன்தாரா ஆக்டிவாக இருந்து வருகிறார்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]