Bigg Boss Season 7 : பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்க தெரியுமா ? முழு விவரம் இதோ..

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

 
biggboss tamil season  contestants details

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.எல்லா சீசனிலும் ஒரே வீட்டில் தான் போட்டியாளர்கள் வசிப்பார்கள். இந்த முறை சற்று வித்தியாசமாக இரண்டு வீடுகள் உள்ளது.

பிரதீப் ஆண்டனி, விஜய் வர்மா, அனன்யா ராவ், விசித்ரா, யுகேந்திரன், வினுஷா, ரவீணா, பவா செல்லதுரை, நிக்சன், ஐஷூ, சரவண விக்ரம், விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், மணி சந்திரா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா, அக்‌ஷயா உதயகுமார் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டு உள்ளனர்.எல்லா சீசனை போலவே பிக்பாஸ் 7வது சீசனை காண மக்கள் ஆவாலாக இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சீசனில் கலந்துக்கொண்டுள்ள போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்து பார்க்கலாம். போட்டியாளர்களின் குறைந்தபட்ச சம்பளம் பன்னிரண்டு ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் இருபத்தெட்டு ஆயிரமாகவும் இருக்கிறது.இதில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பதையும் தெரிந்துக்கொள்வோம்.,
biggboss tamil season
  • பிரதீப் ஆண்டனி- ரூ. 20 ஆயிரம்
  • மணிச்சந்திரா- ரூ. 18 ஆயிரம்
  • விஷ்ணு- ரூ. 25 ஆயிரம்
  • விசித்ரா- ரூ. 27 ஆயிரம்
  • ரவீனா- ரூ. 18 ஆயிரம்
  • வினுஷா- ரூ. 20 ஆயிரம்
  • சரவண விக்ரம்- ரூ. 18 ஆயிரம்
  • மாயா கிருஷ்ணன்- ரூ. 18 ஆயிரம்
  • பவா செல்லத்துரை- ரூ. 28 ஆயிரம்
  • விஜய் வர்மா- ரூ. 15 ஆயிரம்
  • ஜோவிகா- ரூ. 13 ஆயிரம்
  • அக்ஷயா உதயகுமார்- ரூ. 15 ஆயிரம்
  • ஐஷு மற்றும் பூர்ணிமா- ரூ. 15 ஆயிரம்
  • அனன்யா ராவ்- ரூ. 12 ஆயிரம்
  • நிக்சன்- ரூ. 13 ஆயிரம்
  • கூல் சுரேஷ்- ரூ. 18 ஆயிரம்
  • யுகேந்திரன்- ரூ. 27 ஆயிரம்

பிக்பாஸ் போட்டியாளர்களில் ரூ.28,000 சம்பளத்தை பெற்று பவா செல்லதுரை வீட்டிலேயே அதிக சம்பளம் பெறுபவராக திகழ்கிறார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP