முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகு தனது நடிப்பை தொடர்கிறார். அவருக்கான ரசிகர்கள் கூட்டம் இன்னும் குறையவில்லை. உலக அழகி பட்டம் பெற்ற பலரில் ஐஸ்வர்யா ராய் இன்னும் பேசி போற்றப்படும் பிரபலமாக இருந்து வருகிறார். 50 வயதை நெருங்கும் ஐஸ்வர்யா ராயின் அழகில் எந்தவித குறையும் இல்லை. ஃபிட்னஸிலும் படு அக்கறை செலுத்தி வருகிறார். ஐஸ்வர்யா ராயுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
ஆராத்யாவுக்கு தற்போது 11 வயது. பச்சன் குடும்பத்தின் ஆசை வாரிசு இவர் தான். ஆராத்யா மீது மொத்த குடும்பமும் பாச மழையை பொழிவார்கள். அதிலும் ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் தனது மகளை கையோடு அழைத்து செல்வார். கேமராக்கள், மீடியாக்கள் அவரை சூழாமல் பார்த்து கொள்வார். மகள் குறித்து வைக்கப்படும் அநாவசியமான கேள்விகளுக்கு மிகவும் காட்டமாக பதில் கூறுவார். அதே போல் சினிமா நிகழ்ச்சி தவிர்த்து விருது நிகழ்சிகள், கலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் நிகழ்ச்சிகள் போன்ற அனைத்திற்கும் மகளை கையோடு அழைத்து செல்வார் ஐஸ்வர்யா ராய்.
இந்நிலையில் ஆராத்யா படிக்கும் ஸ்கூல் ஃபீஸின் தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி ஆராத்யா தற்போது அம்பானி குழுமத்தின் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்து வருகிறாராம். பாலிவுட் பிரபலங்களின் வாரிசுகள் பலரும் இந்த பள்ளியில் தான் படிக்கிறார்களாம். இங்கு மிகச் சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறதாம். மும்பையில் இருக்கும் இந்த பள்ளியின் கட்டணம் லட்சக்கணக்கில் எனவும் சொல்லப்படுகிறது.
அதாவது, எல்கேஜி முதல் 7ம் வகுப்பு வரை கட்டணம் ரூ.1.70 லட்சம் என கூறப்படுகிறது. அதே போல் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கட்டணம் ரூ.4.48 லட்சமாம். 11 முதல் 12ம் வகுப்பு கட்டணம் ரூ.9.65 லட்சம் முதல் தொடங்குகிறதாம். தற்போது ஆராத்யா திருபாய் அம்பானி பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறார் ஸ்போர்ட்ஸ் , டான்ஸ் என அனைத்திலும் கலக்குவாராம். இதுதவிர ஏகப்பட்ட ஆன்லைன் கிளாஸ்களிலும் ஆராத்யா கவனம் செலுத்தி வருகிறாராம்.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation