நடிகை ஷில்பா மஞ்சுநாத் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகம்.நடிகை ஷில்பா மஞ்சுநாத் 2017 ஆம் ஆண்டு வெளியான எமன் என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து காளி என்ற படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது. அதையடுத்து இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கன்னடம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடித்து வருகிறார்.
ஷில்பா மஞ்சுநாத் இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கூடியவர். இவருக்கு 7 லட்சம் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். அடிக்கடி விதவிதமான உடையில் போட்டோ ஷூட் செய்து பகிர்வார். ஷில்பா மஞ்சுநாத் மாடர்ன் லுக்கில் போட்டோஷூட் செய்து பதிவிடுவார்.
தற்போது பிளாக் அவுட் ஃபிட்டில் ஸ்டைலாக போட்டோ ஷூட் செய்து பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் கருப்பு நிற லெதர் கோட்டை மட்டும் போட்டிருக்கிறார். அதற்கு மேட்சாக கருப்பு நிற ஹை ஹீல்ஸ் அணிந்திருக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம் : லியோ படத்தின் நான்கு நாள் வசூல் இத்தனை கோடியா?
மேக்கப்பை பொறுத்தவரை ஆயிலி மேக்கப் லுக்கை கிரியேட் செய்திருக்கிறார்.கண்ணில் காஜல், மஸ்காரா , ஐ லைனர் போட்டு போல்ட் லுக்கில் ரசிக்க வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை பதிவிட்ட ஷில்பா மஞ்சுநாத் ’விண்டேஜ் வைப்ஸ்.. கிளாசிக் ஸ்மைல்ஸ்’ என்று கேப்ஷனாக பதிவிட்டிருக்கிறார்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]