Leo Box Office Collection : லியோ படத்தின் நான்கு நாள் வசூல் இத்தனை கோடியா?

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிவுள்ள லியோ படத்தின் நான்கு நாள் வசூல் விவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 
actor vijay leo movie collection in  days

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகம் முழுவதும் லியோ திரைப்படம் வெளியாகி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்திற்கான ஹைப் வேற லெவலில் இருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை லியோ திரைப்படம் பூர்த்தி செய்திருக்கிறது. இந்த படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். நீண்ட நாட்கள் எதிர்பார்த்த விஜய் -திரிஷா கூட்டணி இந்த படத்தில் அமைந்துள்ளது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ படத்தின் அனைத்து பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்தில் ‘நான் ரெடி தான் வரவா’ என்ற பாடலை விஜய் பாடியிருக்கிறார்.

லியோ திரைப்படம் வெளியான முதல் நாளே உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்து சாதனை படைத்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகார்ப்பூர்வமாக அறிவித்திருந்தது, இந்த படம் நிச்சயமாக ரூ.1000 கோடி வசூலிக்கும் என கூறப்படுக்கிறது.

vijay world wide box office collection

இந்நிலையில் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களே ஆகியுள்ள நிலையில் லியோ படம் ரூ.405 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP