Anu Emmanuel : புடவையில் ரசிக்க வைக்கும் நடிகை அனு இமானுவேல்!

நடிகை அனு இமானுவேல் இன்ஸ்டாகிராமில் சிவப்பு நிற புடவையில் பதிவிட்ட படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
anu emmanuel in red saree latest  photos

நடிகை அனு இமானுவேல் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். தமிழில் துப்பறிவாளன் படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்திருந்தார். நடிகை அனு இமானுவேல் சமீபத்தில் தெலுங்கில் வெளியான ராவணசுரா என்ற படத்தில் நடித்திருந்தார்.

தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் திருச்சியில் நகைக்கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை நடிக்காத வித்தியாசமான கெட்டப்பில் கார்த்தி இந்த படத்தில் நடித்திருக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்திருக்கிறார். தீபாவளியை முன்னிட்டு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகயிருக்கிறது,

அனு இமானுவேலுக்கு இன்ஸ்டாகிராமில் 2 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிடுவார்.

anu emmanuel clicks

போட்டோ ஷூட்!

நடிகை அனு இமானுவேல் சிவப்பு நிற புடவையில் பார்க்க அழகாக இருக்கிறார். புடவைக்கு மேட்சாக சிவப்பு நிறத்திலே ஜாக்கெட் அணிந்திருக்கிறார். அணிகலன்களை பொறுத்தவரை கழுத்தில் கற்கள் பதித்த நெக்லஸ் மற்றும் காதில் தோடு போட்டுள்ளார். மேக்கப்பை பொறுத்தவரை கண்ணிற்கு காஜல், மஸ்காரா மற்றும் உதட்டில் லிப் ஸ்டிக் போட்டிருக்கிறார்.நெற்றியில் சிவப்பு நிற பொட்டு வைத்திருப்பது கூடுதல் அழகு சேர்த்திருக்கிறார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP