என்னதான் தலைமுடியை பராமரிக்க விலை உயர்ந்த பொருட்கள் மார்க்கெட்டில் கிடைத்தாலும், அவை அனைத்து இயற்கையான பொருட்களுக்கு நிகராகாது. குறிப்பாக எண்ணெய்கள்.
தலைமுடிக்கு எண்ணெய் தடவ வேண்டியதன் அவசியத்தை நாம் அனைவரும் அறிந்திருப்போம். காலம் காலமாக தலைக்கு எண்ணெய் தேய்த்து பராமரிக்கும் வழக்கம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தேங்காய் எண்ணெய் முதல் விளக்கெண்ணெய் வரை பலவிதமான எண்ணெய்களும் பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தலைமுடிக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை தீமைகளை பதிவில் படித்தறியலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சருமத்தை வெள்ளையாக்க உதவும் அற்புத ஜூஸ் எது தெரியுமா?
விளக்கெண்ணையில் பல வகைகள் உண்டு. ஆர்கானிக், ஜமைக்கன் மற்றும் ஹைட்ரஜனேற்றப்பட்ட விளக்கெண்ணெய் இதில் அடங்கும்.
உங்களுக்கு நீளமான கூந்தல் வேண்டுமா? தலைமுடிக்கு விளக்கெண்ணெய் தடவலாம்.
விளக்கெண்ணையில் வைட்டமின் E மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது முடியின் வளர்ச்சிக்கு உதவும். உங்களுடைய முடி வளர்ச்சி தடைபட்டு இருந்தால் விளக்கெண்ணையை உங்கள் தலைமுடி பராமரிப்பு வழக்கத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெய் உங்கள் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தும்.
தலை முடியை சரியாக பராமரிக்க தவறினால் முடியின் பளபளப்பு குறைந்துவிடும். இந்நிலையில் தலை முடிக்கு ஹேர் சீரம், ஷாம்பூ போன்றவற்றுடன் விளக்கெண்ணெயையும் தவறாமல் பயன்படுத்தவும்.
இது உயிரற்ற கூந்தலுக்கு ஊட்டமளித்து, ஈரப்பதமாக்கி தலை முடியை நல்ல பளபளப்பாக மாற்றுகிறது. விளக்கெண்ணையை தடவி வந்தால் வறண்ட சேதமடைந்த கூந்தலும் ஆரோக்கியமாக மாறும். மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முடியில் கெரட்டின் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதனால் நல்ல வலுவான தலைமுடியை பெறலாம்.
தலைமுடி பிரச்சனைகளில் பொடுகும் மிகவும் பொதுவானது. இதிலிருந்து விடுபட விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம் விளக்கெண்ணையில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகினால் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உச்சந்தலை தொற்றை தடுக்கின்றன. இதற்கு சிறிதளவு விளக்கெண்ணையை கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்யலாம்.
வெள்ளை முடியை கருமையாக மாற்றக்கூடிய செயற்கை பொருட்கள் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. இவை தலைமுடிக்கு தீங்கு விளைவிக்கலாம். வெள்ளை முடியை போக்க தலைமுடிக்கு விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம்.
உங்களுடைய சருமம் உணர் திறன் வாய்ந்ததாக இருந்தால் விளக்கெண்ணெய் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
விளக்கெண்ணையை நேரடியாக தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டாம். இதை மற்ற எண்ணெயுடன் கலந்து நீர்க்கச் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும். முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்பவர்கள் நிபுணரின் ஆலோசனையுடன் விளக்கெண்ணையை பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: நடிகை த்ரிஷாவின் புடவை கலெக்ஷன்ஸ்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]