
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் தங்களது முகத்தைப் பராமரிக்க பல மெனக்கெடுவார்கள். இதற்காக சந்தைகளில் விற்பனையாகும் பல விதமான அழகு சாதனப் பொருள்களை ஒவ்வொன்றாக வாங்கி உபயோகித்தால் அந்தளவிற்கு சரும பொலிவைப் பெற முடியாது. எவ்வித கெமிக்கல் இல்லாமல் உங்களது முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க பச்சை பாலை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம் என அழகுக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: ஆரோக்கியமான கூந்தலைப் பெறுவதற்கு முந்திரி உதவுமா?
பாலில் உள்ள ஹைட்ராக்சி அமிலங்கள், கால்சியம், வைட்டமின் பி போன்ற ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவியாக இருக்கும். நமது சருமத்தில் கெமிக்கல் பயன்பாடு இல்லாமல் இயற்கையாகவே சுத்தம் செய்ய வேண்டும் என்றால் பால் சிறந்த தேர்வாக அமையும். முகத்தை இயற்யைாக சுத்தம் செய்யக்கூடிய க்ளென்சிங் பண்புகள் உள்ளதால் சருமத்தில் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. மேலும்அதிகளவு செயற்கை அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதால், விரைவில் முக சுருக்கம் ஏற்பட்டு வயதானத் தோற்றத்தைப் பெற்றுவிடுவோம். இதைத் தவிர்ப்பதற்குத் தேவையான கொலாஜன் உற்பத்தி பாலில் உள்ளதால் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: கழுத்தில் கருப்பா இருக்கா? சரி செய்வதற்கான வீட்டு வைத்தியம் இது தான்!
Image Source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]