சூரிய ஒளி கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். பல சரும பிரச்சனைகளும் தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் இந்த ஆபத்தான சூரிய ஒளி கதிர்களால் ஏற்படுகிறது. சூரிய ஒளி கதிர்களில் இருந்து வரும் UV கதிர்கள் நம் சருமத்திற்கு ஆபத்தானவை என்று கூறப்படுகிறது.
UVA ( அல்ட்ரா வயலட் ஆல்ஃபா) என்ற கதிர்கள் நம் சருமத்திற்கு வயதான தோற்றம் அளித்து புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தும். ஆபத்தான சூரிய ஒளி கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்க சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தினசரி நம் சருமத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தி வந்தால் சூரிய ஒளி கதிர்களின் தாக்கத்தால் சருமம் நிறம் மங்குதல் மற்றும் வயதான அறிகுறிகள் போன்றவற்றை தடுக்கலாம். அதே போல சன் ஸ்கிரீன் வாங்குவதற்கு முன்பு உங்கள் சரும நிறத்திற்கும் சரும வகைக்கும் ஏற்ற சன்ஸ்கிரீனை தேர்வு செய்த வாங்க வேண்டும். குறிப்பாக எஸ்பிஎஃப் அதிகமாக இருக்கும் சன்ஸ்கிரீன்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். SPF 30+ அல்லது SPF 50+ உள்ள சன் ஸ்கிரீன்களை பயன்படுத்துவது நல்லது என்று சரும நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: இயற்கை முறையில் மேக்அப் அகற்றுவது எப்படி?
சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் செல்லும்போது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்லது. கோடை காலம் என்றாலும் சரி குளிர்காலம் என்றாலும் சரி சருமத்தை பராமரிக்க கூடுதலாக ஸ்கின் கேர் செய்வது முக்கியம். பருவ கால மாற்றங்கள் நம் சருமத்தை பாதிக்காமல் இருக்க இந்த சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம்.
அல்ட்ரா வயலட் கதிர் போன்ற ஆபத்தான சூரிய கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்கும் வகையில் சன்ஸ்கிரீனை கவனமாக தேர்வு செய்து வாங்க வேண்டும். மாநிறமான சருமம் இருப்பவர்கள் எஸ்பிஎஃப் 30+ உள்ள சன்ஸ்கிரீனை தினமும் பயன்படுத்தலாம். அதே போல வெயிலில் அதிக நேரம் செலவிட நேர்ந்தால் எஸ்பிஎஃப் 50+ உள்ள சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். அது மட்டும் இல்லாமல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை முகம், கை, கால்கள் போன்ற பகுதிகளில் சன்ஸ்கிரீன் அப்ளை செய்ய வேண்டும்.
வெயிலில் சென்றால்தான் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் நினைப்பது உண்டு. ஆனால் அது உண்மை இல்லை. வெளியில் செல்லும்போது வெயில் இல்லை என்றாலும் வெப்பம் அதிகமாக இருப்பதால் UV கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதனால் சன்ஸ்கிரீனை தினசரி பயன்படுத்து நல்லது. சன் ஸ்கிரீன் பயன்படுத்தும் போது சருமம் UV கதிர்களை உறிஞ்சுவதை குறைத்து சருமத்தை பாதுகாக்கிறது.
மேலும் படிக்க: தினமும் இந்த ஜூஸ் குடிங்க. கண்டிப்பாக முகம் பளபளப்பாகும்!
மழைக்காலமாக இருந்தாலும் அல்லது வீட்டுக்குள்ளேயே இருந்தாலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம். UV கதிர் என்று கூறப்படும் புற ஊதா கதிர்கள் மேகங்கள் வழியாக வாகனங்களில் அல்லது கட்டிடங்களில் உள்ள ஜன்னல்கள் வழியாகவும் உங்கள் சருமத்தை தாக்கும். இதன் பாதிப்பு குறைவாக இருந்தாலும் சருமத்தின் வயதாகும் தன்மையை அதிகரிக்கிறது. இது நாளடைவில் தோல் புற்றுநோய் போன்ற நோய்களை உண்டாக்கலாம். சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் நம் சருமத்தில் உள்ள செல்களை தாக்கி சருமத்தில் உள்ள செல்களை பாதிக்கும். இதனால் தோளின் நிறம் மாறக்கூடும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]