தற்போதைய நவீன காலத்தில் பெரும்பாலான இளம் பெண்களின் மிகப்பெரிய கனவு என்பது தங்களின் முகம் அழகாக இருக்க வேண்டும். அதுவும் ஒரு கூட்டத்தில் கூட தங்களின் முகமும் உடல் மொத்தமும் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக சிறுவயதிலிருந்தே பெண்கள் தயாராகி வருவதை உங்களால் பார்த்திருக்க முடியும். ஏனென்றால் அழகு என்பது பெண்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகும். இதற்காக இளம் வயது பெண்கள் எப்படியாவது அழகாக வேண்டும் என்பதற்காக, ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் பல்வேறு அழகு சாதன பொருட்களை விலை அதிகமாக கொடுத்து வாங்கி நாள் கணக்கில் பயன்படுத்தி வருகிறார்கள்.
மேலும் படிக்க: குளிப்பதற்கு முன் கற்றாழையை முகத்தில் எப்படி தடவுவது? எத்தனை நாட்கள் செய்ய வேண்டும்?
அதேபோல் விலை உயர்ந்த சலூன் பார்லர்களுக்கு சென்று முகத்தை அழகுபடுத்திக் கொள்கிறார்கள். இப்படி ஒட்டுமொத்தமாக ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை மட்டும் தங்களின் முக அழகிற்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. ஆனால், இத்தனை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தினாலும் பெண்கள் எதிர்பார்த்த அழகு கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது நிலைத்து இருப்பதில்லை.
இது போன்ற நேரங்களில் எப்போதுமே ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்கள், சலூன், பார்லர்களை மட்டும் நம்பி இருக்காமல் சில இயற்கையான வீட்டு வைத்தியங்களை வைத்து உங்கள் முகத்தை நீங்கள் அழகுபடுத்திக் கொள்ளலாம். குறிப்பாக முகத்தில் வரும் தேவையற்ற முடிகள், கருப்பு தழும்புகள், முகப்பருக்கள் ஆகியவற்றை போக்க முடியும். இதேபோல் முகத்தில் வாயின் இரு ஓரங்களிலும் ஒரு சிலருக்கு கருப்படைந்து இருக்கும். முழங்கை, முழங்கால்கள் கூட அடர் கருப்பு நிறத்தில் இருக்கும். இதனால், பெரும்பாலான பெண்கள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை கூட அணிய முடியவில்லை என்று புலம்புவதை பார்த்திருக்கிறோம்.
பெண்களின் ஒட்டுமொத்த அழகு பிரச்சனையை சரி செய்ய இந்த பதிவில் இயற்கையான வீட்டு வைத்தியம் உள்ளது. வெறும் ஐந்து ரூபாயில் முகத்தின் ஆங்காங்கே இருக்கும் கருப்பு தழும்புகள், அதே போல் வாயின் ஓரத்தில் இருக்கும் கருப்பு தழும்புகள், முழங்கை முழங்கால்கள் ஆகிய இடத்தில் இருக்கும் கருப்பு தழும்புகளை போக்க சில முக்கியமான வீட்டு வைத்தியம் இதில் உள்ளது. அதை என்ன எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
மஞ்சள் மாயாஜால பண்புகளைக் கொண்டுள்ளது என்பது உண்மைதான். இது உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் நன்மை பயக்கும். அதனால்தான் மஞ்சளை முடிந்தவரை உணவு மற்றும் பயன்பாட்டில் பயன்படுத்துவது நல்லது. மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சரும செல்களை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. கருமையான நிறத்துடன், மஞ்சள் முகப்பரு, தழும்புகள் மற்றும் பிற தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு மிகவும் துல்லியமாக செயல்படுகிறது. மஞ்சள் ஒவ்வொரு வீட்டு மசாலாப் பொருட்களிலும் உள்ளது மற்றும் அதன் பிரகாசமான மஞ்சள் நிறம் உங்கள் உணவின் நிறத்தை மாற்றுவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது மற்றும் அதற்கு அழகைத் தருகிறது.
சருமப் பொலிவுக்கு, 1 டீஸ்பூன் கடலை மாவில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் அரை டீஸ்பூன் காபி சேர்த்து கலந்து, தேவைக்கேற்ப ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். இது சருமத்தை உரிந்து, இறந்த சரும செல்களை அகற்றும்.
சருமத்தை மென்மையாக்க, அரிசி மாவுடன் கற்றாழை ஜெல்லை கலந்து, சிறிது மஞ்சள் தூள் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை தடவவும். இதனால் சருமம் வயதானதைத் தடுக்கலாம்.
சருமத்தில் ஏற்படும் வறட்சியைக் குறைக்க, முல்தாலி மிட்டியை மஞ்சள் மற்றும் பாலுடன் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இப்போது அதை முகத்தில் தடவி விட்டு விடுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் படிக்க: கண்களுக்கு கீழே கருப்பான, ஆழமான குழிகள் - 5 ரூபாயில் ஐந்தே நாளில் சரி செய்யலாம்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள்.
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]