முடி உதிர்தல் என்பது வீட்டை விட்டு வெளியேற விரும்பாத ஒரு தேவையற்ற விருந்தினர் போன்றது. மன அழுத்தம் முதல் ஆரோக்கியமற்ற உணவு, மாசுபாடு என பல காரணிகள் முடி உதிர்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், கொஞ்சம் அன்புடனும் அக்கறையுடனும் சில எளிய குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம்.
முடி பராமரிப்பு பொருட்களை மாற்றுவது அல்லது ஸ்பாவிற்கு செல்வது தலைமுடிக்கு உதவும். இருப்பினும் பிஸியான காலகட்டத்தில் வீட்டில் சில வைத்தியங்களை பின்பற்றுவது கடினமான ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் மிக எளிதான முறை பின்பற்ற வழிகள் உண்டு. அதிகப்படியான முடி உதிர்தல் பிரச்சனையை கட்டுப்படுத்த 3 எளிய வழிமுறைகள். இதைப் பற்றி நம்மிடம் கூறுகிறார் Deyga Organics நிறுவனர் ஆர்த்தி ரகுராம்.
இந்த பதிவும் உதவலாம்: முடி கொட்டுவதை நிறுத்த வீட்டிலலேயே என்ன செய்யலாம் தெரியுமா?
வீட்டில் சூடான எண்ணெய் ஸ்பா
சிறந்த ஹேர் ஸ்பாவைப் பெற சலூனுக்குச் செல்ல வேண்டியதில்லை. வீட்டிலேயே சூடான எண்ணெய் ஸ்பா மூலம் தலைமுடியைப் பராமரிக்கலாம். எண்ணெய்கள் கூந்தலுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் அவை கூந்தலுக்கு உள்ளிருந்து ஊட்டமளித்து வேர்களில் இருந்து பலப்படுத்துகின்றன.
எண்ணெய் மசாஜ் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்க உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது பின் வளர்ச்சிக்கு தூண்டுகிறது. தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெய்கள் முடிக்கு மிகவும் ஈரப்பதம் மற்றும் முடி உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.
செய்முறை:
- எண்ணெய்களில் ஒவ்வொன்றிலும் ஒரு தேக்கரண்டி கலந்து சில நிமிடங்கள் சூடாக்கவும்.
- பின் 10-15 நிமிடங்கள் தலைமுடிக்கு நன்கு மசாஜ் செய்யவும்.
- ஒரே இரவிவு விட்டு விடுங்கள்.
- மென்மையான கூந்தலுக்கு மறுநாள் லேசான ஷாம்பூவைக் கொண்டு தலையைக் கழுவவும்.
- முடி உதிர்வதைக் குறைக்க வாரத்திற்கு ஒரு முறை செய்யலாம்.
முட்டை மற்றும் அவகேடோ ஹேர் மாஸ்க்
முட்டையில் புரோட்டீன் நிறைந்துள்ளதால் ஹேர் மாஸ்க்காகப் பயன்படுத்துவது கூந்தலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இது முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சேர்ப்பதால் முடி வலிமையானதாக இருக்கும். அவகேடோ முடிக்கு மிகவும் ஊட்டமளிக்கிறது மற்றும் முடிக்கு ஈரப்பதத்தை வழங்குவதன் மூலம் முடி உடைவதைத் தடுக்கிறது.
செய்முறை:
- இரண்டு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு முட்டை மற்றும் ஒரு அவகேடோவை கலக்கவும்.
- இந்த பேஸ்ட்டை முடியின் வேர்களில் இருந்து அதன் நீளம் வரை தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- முடி உதிர்வதைத் தடுக்க வாரத்திற்கு ஒரு முறை இந்த பேஸ்ட்டை பயன்படுத்துங்கள்.
க்ரீன் டீ மற்றும் அலோ வேரா ஹேர் பேக்
க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் முடி உதிர்வைத் தடுக்கும். கற்றாழை ஒரு பாக்டீரியா எதிர்ப்பு கூறுகளாக செயல்படுகிறது. பின் தலை பொடுகு மற்றும் எண்ணெய் பசையில் இருந்து விடுபட உதவுகிறது.
செய்முறை
- 1-2 கிரீன் டீ பைகளை வெந்நீரை ஊற்றி குளிர்விக்க அனுமதிக்கவும்.
- இந்த கிரீன் டீ சாற்றை கற்றாழை ஜெல்லுடன் கலக்கவும்.
- இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
கட்டாயம் இதை படியுங்கள்: முடி உதிர்வதை விட இரண்டு மடங்கு வேகமாக வளர இந்த வேலையை செய்யுங்கள், நீண்ட மற்றும் ஆரோக்கியமான முடி இனி ஒரு கனவு அல்ல. முடி பராமரிப்பு வழக்கத்தில் இந்த வைத்தியங்களைச் சேர்த்து,முடி உதிர்தலுக்கு என்றென்றும் குட்பை சொல்லுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: ரொம்ப வேகமா முடி அடர்த்தியாக வளர வீட்டு வைத்தியம்
உங்களுக்கும் முடி தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருந்தால், கட்டுரையின் கீழே உள்ள கருத்து பெட்டியில் எங்களிடம் கூறுங்கள், அதை எங்கள் கட்டுரைகள் மூலம் தீர்க்க முயற்சிப்போம்.
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள். மேலும் இதுபோன்ற கட்டுரைகளை படிக்க Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation