herzindagi
Improve skin glowing

Skin Health:முக பளபளப்பிற்கு நீங்கள் செய்ய வேண்டியது?

<span style="text-align: justify;">வறண்ட சருமத்தைத் தடுக்க வேண்டும் என்றால் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும்</span>
Editorial
Updated:- 2024-01-17, 21:51 IST

பெண்கள் தங்களது முகத்தை எப்போதும் ஆரோக்கியமாக மற்றும் பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. பெண்களில் சிலர் இதற்காக அழகுநிலையங்களுக்கு செல்வார்கள். அனைவராலும் முகத்தைப் பராமரிப்பதற்காக பணத்தை அதிகம்  செலவிட முடியாது. ஆனாலும் வீட்டிலுள்ள சில பொருள்களை வைத்து உங்களது முகத்தை அழகாக்கிக் கொள்ள முடியும். இதோ உங்களுக்கான சில சிம்பிள் ப்யூட்டி டிப்ஸ் இங்கே.

skin health

மேலும் படிங்க: கண்களுக்கு கீழுள்ள கருவளையங்களை தீர்க்கும் உதவிக்குறிப்புகள்

முக பளபளப்பிற்கான அழகுக்குறிப்புகள்

  • குளிர்காலமாக இருந்தாலும்,வெயில் காலமாக இருந்தாலும் சருமம் வறண்டு விடும். சில நேரங்களில் சருமத்தின் செல்கள் இறந்துவிட நேரிடும். இதனால் முகம் பளபளப்பை இழந்துவிடும். இந்த நேரத்தில் உங்களது முகத்தை நீங்கள் அழகாக வைத்திருக்க வேண்டும் என்றால் கடலை மாவு உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.
  • கடலை மாவு மற்றும் அதே அளவிற்கு தயிரை எடுத்துக்கொண்டு பேஸ்ட் போன்று உருவாக்கிக் கொள்ளவும். பின்னர் இதை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை செய்யும் போது முகத்தில் உள்ள ஆழமான அழுக்குகளை நீக்கி சருமத்தை பிரகாசமாக்கும்.
  • சருமம் எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கிறது என்ற வார்த்தைகளை அதிகளவில் கேள்விபட்டிருப்போம். என்ன தான் பேஸ்கிரிம் மற்றும் சோப்புகளை உபயோகித்தாலும் பலரது முகம் எண்ணெய் சருமத்துடன் இருக்கும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், நீங்கள் வீட்டில் உள்ள தக்காளியை உபயோகிக்கலாம். இதில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் முகத்தில் எண்ணெய் படிவதைத் தடுக்கிறது.
  • நீங்கள் தக்காளியை தோலுரித்து முகத்தில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் போதும் எண்ணெய் சருமமின்றி முகம் பளபளப்புடன் இருக்கும்.
  • முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும் மற்றும் முகத்தை எப்போதும் பிரகாசமாக வைத்திருக்க நீங்கள் பப்பாளியை உபயோகிக்கலாம்.  இதில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் உங்களது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவியாக உள்ளது.
  • பாசிப்பருப்பு, மஞ்சள், பால் கலந்து முகத்தில் அப்ளை செய்யும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், பருக்களைப் போக்கவும் உதவியாக உள்ளது. 
  • சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வெதுவெதுப்பான சூடான நீரைக் கொண்டு எப்போதும் முகத்தை கழுவ வேண்டும்.
  • குளிர்காலமாக இருந்தாலும், வெயில் காலமாக இருந்தாலும் நீங்கள் எப்போது வெளியில் சென்றாலும் சன்ஸ்கிரீனை உபயோகிக்க வேண்டும். இது புற ஊதா கதிர்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவியாக இருக்கும்.
  • வறண்ட சருமத்தைத் தடுக்க வேண்டும் என்றால் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். உங்களுக்குப் பிடித்த ஜூஸ் அல்லது தினமும் 2-3 லிட்டர் தண்ணீரை நீங்கள் பருக வேண்டும். 

  skin care tips ()

இது போன்ற முறைகளை நீங்கள் பின்பற்றினாலும், உங்கள் தோலில் ஏதேனும் வித்தியாசமான மாற்றங்களைக் கண்டால் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெறுவது நல்லது.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]