herzindagi
pomegranate facial big

மாதுளையில் பேஷியல் செய்வதன் மூலமாக உங்கள் முகத்தை பளபளப்பாக்கலாம்!!!

மாதுளையில் ஒரு பேஷியல் செய்து உங்களின் முகத்தை பளபளக்க செய்யலாம் வாருங்கள்.
Editorial
Updated:- 2022-11-10, 10:10 IST

பழங்கள் உங்களின் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதோடு சருமத்துக்கும் நன்மை அளிக்கக்கூடியது. நீங்கள் வீட்டில் இருந்தபடியே பழங்களின் உதவியுடன் பல பேஷியலை செய்யலாம்.

பேஷியல் செய்வதனால் அடைப்பட்ட சரும துளைகளை சரிசெய்ய முடியும். மேலும் வறண்ட சருமத்துக்கு நீர்ச்சத்தை வழங்க உதவும். அதோடு இறந்த சரும செல்களை நீக்கவும் நமக்கு உதவும். அதனால் தான் மாதம் ஒருமுறையாவது பேஷியல் செய்ய வேண்டுமென பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், பலரும் காசை வாரி இரைத்து பேஷியல் செய்கின்றனர். பலர் செலவு அதிகமாவதால் பார்லர் போவதையும் தவிர்க்கின்றனர்.

நீங்களும் செலவை கருத்தில் கொண்டு பார்லர் போவதை நிறுத்தி விட்டீர்களா? எனில், இந்த குறிப்பு நிச்சயம் உங்களுக்கு பலனளிக்கும். இதற்காக மார்க்கெட்டில் சென்று கூட நீங்கள் எதையுமே வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. உங்கள் வீட்டு கிட்சனில் உள்ள பொருட்களே போதும்.

உங்கள் வீட்டு ஃபிரிட்ஜில் பழங்கள் நிறைந்துள்ளதா? உங்களுக்கு பழங்கள் என்றால் மிகவும் பிடிக்குமா? அருமை, ஏனெனில், பழங்கள் நம்முடைய உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. நம்முடைய சருமத்தை மேம்படுத்தவும் பழங்கள் உதவுகிறது. மாதுளை பழம் சாப்பிடுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதேபோல, முகத்தில் மாதுளையை தடவும்போது, சருமத்துக்கு எண்ணற்ற பலன்களை தருகிறது. மாதுளை பழத்தின் உதவியுடன் உங்களால் ஒரு பேஷியலை செய்துவிட முடியும். இது சாத்தியமா என உங்கள் மனதில் தோன்றலாம். ஆனால், உண்மை என்னவென்றால், சில வழிகளின் மூலமாக அருமையான மாதுளை பேஷியலை உங்களால் மிக எளிதில் செய்ய முடியும். எப்படி என்பதை தெரிந்துக்கொள்ள, தொடர்ந்து படித்தறிந்து பயன் பெறவும்.

ஸ்டெப் 1

pomegranate facial

  • பேஷியலின் முதல் ஸ்டெப் முகத்தை அலசுதல். முகத்தை அலசுவதன் மூலமாக முகத்தில் உள்ள அழுக்கை போக்க முடியும்
  • முகத்தை சுத்தம் செய்ய, உங்களுக்கு மாதுளை சாறும், ரோஸ் வாட்டரும் தேவைப்படுகிறது
  • ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதால் முகம் சுத்தம் அடைவதோடு மட்டுமல்லாமல், சருமத்துக்கு நீர்ச்சத்தை வழங்கவும் உதவுகிறது
  • அரை கப் மாதுளை சாறில் குறைந்தது 10 சொட்டு ரோஸ் வாட்டரை கலந்துக்கொள்ளவும்
  • இப்போது காட்டன் பஞ்சை ஊறவைத்து கொள்ளவும். பிறகு, முகத்தில் வட்ட வடிவத்தில் தடவவும்
  • சிறிது நேரம் தேய்த்து, சாதாரண நீரை கொண்டு முகத்தை அலசவும்
  • அவ்வளவு தான், இப்போது உங்கள் முகம் சுத்தமாக இருக்கும்

ஸ்டெப் 2

pomegranate facial

  • பேஷியலின் இரண்டாவது ஸ்டெப் ஸ்கிரப்பிங் தான்
  • சருமத்தை ஸ்கிரப்பிங் செய்வது மிகவும் முக்கியம். இவ்வாறு செய்வதன் மூலமாக இறந்த சரும செல்களை நீக்க முடியும். இதனால் சருமம் சுத்தமாக காணப்படும்
  • ஸ்கிரப்பிங் செய்வதற்கு, மாதுளை சாறும், அரிசி மாவும் வேண்டும்
  • மாவு பெரிய அளவில் இருக்க வேண்டும். இல்லையெனில், ஸ்கிரப் செய்ய முடியாது
  • 4 ஸ்பூன் அரிசி மாவில், 3 ஸ்பூன் மாதுளை சாறினை கலந்துக்கொள்ளவும். இந்த பேஸ்ட் கெட்டியாக இருக்க வேண்டும்
  • இப்போது முகத்தில் தடவவும். பிறகு கைகளை வைத்து லேசாக தேய்க்கவும்
  • பிறகு முகத்தை அலசி, ஸ்கிரப்பிங்கை எடுக்கவும்

ஸ்டெப் 3

pomegranate facial

  • இப்போது முகத்தில் கிரீமை தடவவும்
  • இதனால் உங்கள் முகம் மென்மையாக இருக்கும்
  • இதற்கு, 2 டீஸ்பூன் கிரீமில், 1 டீஸ்பூன் மாதுளை சாறினை கலந்துக்கொள்ளவும்
  • பிறகு, வீட்டில் தயாரித்த கிரீமை உங்கள் முகத்தில் தடவவும்
  • கைகளை லேசாக கொண்டு முகத்தில் தடவவும்

ஸ்டெப் 4

pomegranate facial

  • பேஷியலின் கடைசி ஸ்டெப்பில், உங்கள் முகத்தில் பேஸ் மாஸ்க்கை பயன்படுத்தவும்
  • 1 டீஸ்பூன் கொக்கோ பவுடரை, 1 டீஸ்பூன் மாதுளை சாறுடன் கலக்கவும்
  • இப்போது கலந்ததை முகத்தில் தடவி, காயும் வரை வைத்திருக்கவும்
  • நன்றாக காய்ந்த பிறகு, முகத்தை அலசவும்
  • அவ்வளவு தான் உங்களின் மாதுளை பேஷியல் முடிவடைந்தது

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: shutterstock, pexels

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]