herzindagi
image

கொளுத்தும் வெயிலில் டேன் ஆகாமல் இருக்க; இந்த இயற்கை வழிகளை ட்ரை செய்து பாருங்க

வெயிலில் செல்லும்போது சிலருக்கு சருமத்தில் டேன் ஆவது பொதுவான ஒரு பிரச்சனை. இந்த டேன் பிரச்சனையை இயற்கை முறையில் சரி செய்ய என்ன செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
Editorial
Updated:- 2025-06-12, 23:23 IST

சருமத்தில் டேன் என்பது சூரிய ஒளி, புற ஊதா கதிர்கள் (UV Rays) மற்றும் மாசு போன்றவற்றால் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை. குறிப்பாக கோடை காலங்களில் இந்த டேன் பிரச்சனை அதிகரிக்கிறது. இரசாயன கிரீம்கள் மற்றும் லோஷன்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையான முறைகளைப் பின்பற்றி தோல் டேன் ஆகாமல் தடுக்கலாம்.

நிழலில் தங்குங்கள்:


சூரிய ஒளி அதிகமாக இருக்கும் நேரங்களில் குறிப்பாக மதியம் 10 முதல் பிற்பகல் 4 மணி வரை நேரடியாக சூரிய ஒளியில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். நிழலில் நடப்பது, குடை அல்லது தொப்பி பயன்படுத்துவது போன்றவற்றைப் பின்பற்றினால் தோல் கருப்பாகாமல் குறைக்கலாம்.

இயற்கையான சன் ப்ளாக்குகளைப் பயன்படுத்துங்கள்:


கொக்கோ பட்டர், ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்றவை இயற்கையான சன் ப்ளாக்குகளாக செயல்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் புற ஊதா கதிர்களிலிருந்து தோலைப் பாதுகாக்கலாம். குறிப்பாக, வெளியே செல்வதற்கு முன் இந்த எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.

DRMT41480311

தோலுக்கு ஈரப்பதத்தை அளிக்கும் பொருட்களைப் பயன்படுத்துங்கள்:


தோல் உலர்ந்து போனால், அது கருப்பாக எளிதில் மாறும். எனவே, கற்றாழை ஜெல், தேன், தயிர் போன்ற இயற்கை ஈரப்பதமூட்டிகள் தோலுக்கு நல்லது. இவை தோலின் இயற்கையான பளபளப்பைக் காப்பதுடன், கருப்பாதலைத் தடுக்கும்.

மேலும் படிக்க: ஆரஞ்சு சாப்பிட்டு தோலை தூக்கி வீசாதீங்க; ஜொலிக்கும் முகத்திற்கு இப்படி யூஸ் பண்ணி பாருங்க

தண்ணீர் அதிகம் குடியுங்கள்:


தோலின் ஆரோக்கியத்திற்கு நீர் மிகவும் முக்கியமானது. நீர் அதிகம் குடிப்பதன் மூலம் தோல் உள்ளிருந்து ஈரப்பதமாக இருக்கும். இது சூரிய ஒளியின் தாக்கத்தை உடலில் குறைக்க உதவுகிறது.

water-types-scaled

வைட்டமின் C நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள்:


ஆரஞ்சு, தக்காளி, கிவி, பப்பாளி போன்ற வைட்டமின் C நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் தோலின் நிறத்தை பாதுகாக்க உதவுகின்றன. இவை தோலின் மெலனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, கருப்பாதலைத் தடுக்கின்றன.

க்ரீன் டீ மற்றும் முல்தானி மெட்டி பயன்படுத்துங்கள்:


க்ரீன் டீ தூள் மற்றும் முல்தானி கலந்து பேக் தயாரித்து தோலில் பூசினால், தோல் கருப்பாதல் குறையும். இவை தோலின் இயற்கையான வெளிர் நிறத்தை மீட்டெடுக்க உதவுகின்றன.


வீட்டில் தயாரிக்கும் பேக்குகளைப் பயன்படுத்துங்கள்:


தயிர் மற்றும் புளி பேக்: தயிர் மற்றும் சிறிது புளியைக் கலந்து தோலில் பூசி 15 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு கழுவினால், தோல் கருப்பாதல் குறையும். ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்: ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரையைக் கலந்து தோலில் மெதுவாக தேய்த்தால், இறந்த செல்கள் நீங்கி தோல் பிரகாசமாகும்.

அந்த வரிசையில் இயற்கையான முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் தோல் கருப்பாதலை எளிதாகக் குறைக்கலாம். இரசாயன பொருட்களை விட, இயற்கை பொருட்கள் தோலுக்கு பாதுகாப்பானவை. மேலே குறிப்பிட்டுள்ள வழிகளைப் பின்பற்றி, உங்கள் தோலை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்கலாம்.

Image source: google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]