herzindagi
image

Glowing Face: முகத்தை சுத்தமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க எளிய வீட்டு வைத்தியம்

ஒவ்வொரு பெண்ணும் தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தைப் பெற விரும்புவார்கள். ஆனால் இவை அனைத்தும் ஒரே நேரத்தில் பெறவது கடினம். இந்த முறைகளை பயன்படுத்தினால் எளிதாக பெறலாம்.
Editorial
Updated:- 2024-10-18, 14:27 IST

நாம் அனைவரும் தெளிவான மற்றும் ஒளிரும் சருமத்தை விரும்புகிறோம். முகப்பரு, வறண்ட மற்றும் மந்தமான தோல் போன்ற சரும பிரச்சனைகள் அழகை கேடுக்க செய்கிறது . முகத்தை சுத்தமாக வைத்திருப்பது இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும். ஆனால் சுத்தம் செய்ய ஒவ்வொரு மாதமும் சலூன்களுக்குச் சென்று செய்தால் பணம் செலவு அதிகமாகும்  தவிர தெளிவான சருமத்தை பெற முடியாது. வீட்டில் இந்த ஐந்து செயல்முறைகளை செய்தால் தெளிவான முகத்தை பெறலாம்.

முகத்தை சுத்தம் செய்வது முக்கியம்

face wash image

 

முக சுத்தப்படுத்தியைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை சுத்தம் செய்யும் முறையாகும். பச்சை பாலை விட சிறந்த சுத்தப்படுத்திகள் எதுவும் இல்லை. அனைத்து அழுக்குகளையும் அகற்ற முகத்தில் போதுமான வெதுவெதுப்பான நீரை கழுவது மூலம தொடங்க வேண்டும். இப்போது பருத்தி பஞ்சுகளை பச்சை பாலில் நனைத்து முகத்தில் தடவவும். அதன்பிறகு முகத்தை மசாஜ் செய்யலாம் அல்லது காட்டன் பேட்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். உங்கள் முழு முகம் மற்றும் கழுத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.

 

முகத்தை ஸ்டீம் செய்ய வேண்டும்

 

மேலும் படிக்க: ஒரு வாரத்தில் தலைமுடி வளர்ச்சியைக் காண புளித்த அரிசி தண்ணீரை பயன்படுத்துங்கள்

 

முகத்தை சுத்தமாக வைத்திருக்க செய்ய வேண்டியவை ஸ்டீமரைப் பயன்படுத்தி நீராவி செய்ய வேண்டும். ஒரு கொள்கலனில் போதுமான தண்ணீரைக் கொதிக்க வைத்து அதை ஸ்டீமராகப் பயன்படுத்தலாம். நீராவி எடுக்கும் போது தலையை ஒரு துண்டு கொண்டு மூடி வைக்கவும். இந்த செயல்முறையை 10 நிமிடங்கள் செய்யவும். முடிந்ததும், ஏதேனும் கரும்புள்ளிகளைப் பிரித்தெடுக்க பிளாக்ஹெட் ரிமூவரைப் பயன்படுத்தவும். மென்மையான ஃபேஸ் டவலால் முகத்தைத் துடைக்கவும்.

உரித்தல் முக்கியமானது

rice cream face

 

உரித்தல் என்பது சுத்தம் செய்யும் செயல்பாட்டில் முக்கியமான ஒன்றாகும். இதை சரியாகப் செய்ய விலையுயர்ந்த எக்ஸ்ஃபோலியேட்டர்களில் முதலீடு செய்ய வேண்டியதில்லை. நீங்கள் ஓட்ஸ் அல்லது பெசானை எக்ஸ்ஃபோலியேட்டர்களாகப் பயன்படுத்தலாம். ஒரு கிண்ணத்தில் ஓட்ஸ் மற்றும் பால் சேர்த்து எக்ஸ்ஃபோலியேட்டிங் மாஸ்க் செய்யலாம்.

 

முகமூடியைப் பயன்படுத்துவும்

 

மேலும் படிக்க: முடிக்கு தேவைப்படும் 5 சக்திவாய்ந்த ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கும் கிராம்பு தண்ணீர்

 

அடுத்த கட்டம் ஈரப்பதமூட்டும் முகமூடியைப் பயன்படுத்துவதாகும். ஒரு கிண்ணத்தில் தேன், கற்றாழை ஜெல் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து முகமூடியை உருவாக்கலாம். இதை 15 நிமிடங்கள் தடவி வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

 

டோனருடன் முடிக்கவும்

oily skin rice flour face pack

 

பயனுள்ள துப்புரவு செயல்முறைக்கான கடைசியாக டோனர் செய்ய வேண்டும். ரோஸ் வாட்டர் அல்லது வெள்ளரி சாறு ஒரு சிறந்த டோனராக செயல்படும். நீங்கள் இரண்டையும் இணைக்கலாம் அல்லது தனித்தனியாக டோனராகப் பயன்படுத்தலாம். அதை உங்கள் முகத்தில் தெளித்து, மெதுவாக உங்கள் தோலில் தடவவும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]