herzindagi
skin glowing tips

Skin Care: இயற்கையான முறையில் முகப் பொலிவு பெற வேண்டுமா? இந்த உங்களுக்கான டிப்ஸ்!

இயற்கையான முறையில் முகத்தை அழகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எவ்வித அச்சமும் இன்றி கற்றாழையை தேர்வு செய்யலாம்
Editorial
Updated:- 2024-01-22, 22:10 IST

பெண்களின் அழகை வர்ணிக்கும் போது அவர்களின் முகம் தான் பிரதான இடம் பிடிக்கும். இதனால் தான் என்னவோ? பெண்கள் எப்போதுமே முகத்தை மிகவும் அழகாக வைத்திருக்க வேண்டும் என மெனக்கெடுவார்கள். சிலர் அழகுநிலையங்களுக்கு செல்வார்கள். ஒரு சிலரோ வீட்டில் உள்ள அத்தியாவசிய பொருள்களைப் பயன்படுத்தி தங்களின் அழகை மெருக்கூட்டுவார்கள். இதோ உங்களின் முக அழகை மேலும் அழகாக்குவதற்காக சில அழகுக்குறிப்புகள் இதோ உங்களுக்காக...

turmeric skin glowing 

இயற்கை முறையில் முகம் பளபளப்பு:

  • இயற்கையான முறையில் முகத்தை அழகாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், எவ்வித அச்சமும் இன்றி கற்றாழையை தேர்வு செய்யலாம். கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையக்கூடும். மேலும் முகப்பரு வடுக்களையும் குறைக்கவும் உதவியாக உள்ளது.
  • பெண்கள் அடுத்ததாக முக பொலிவிற்காக தேன் தேர்வு செய்யலாம். இதில் உள்ள இயற்கை மாய்ஸ்சரைசர் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தைத் தெளிவாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் தினமும் தேனை முகத்தில் அப்ளை செய்யும் போது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்தை பிரகாசமாக்குகிறது.
  • பப்பாளி பெண்களின் முகத்தை பளபளபாக்குவதற்கு உதவும் அழகு சாதனப் பொருள்களில் முக்கியமானது. இதில் உள்ள பப்பைன் என்ற வேதிப்பொருள் முகத்தில் மேல் அடுக்கில் உள்ள இறந்த செல்களை மெதுவாக நீக்குகிறது. மேலும் முகத்தைப் பொலிவாக்குகிறது. நீங்கள் பழுத்த பப்பாளி அல்லது அதன் தோலைக் கொண்டு முகத்தில் கிரப் செய்வது போன்று தேய்த்து அரை மணி நேரத்திற்கு அப்படிவே விட்டுவிடவும்.
  • மஞ்சள் பூசினாலே பெண்கள் கூடுதல் அழகைப் பெறுவார்கள். பெண்கள் கருப்பாக இருந்தாலும் மஞ்சள் பூசி குளிக்கும் போது கலையாக இருப்பார்கள். இதில் உள்ள குர்குமின் மற்றும் சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முகத்தை பளபளப்புடன் வைத்திருக்க உதவுகிறது. காலையில் அல்லது தூங்குவதற்கு முன்னதாக முகத்தில் மஞ்சள் அப்ளை செய்யவும். 30 நிமிடங்களுக்குப் பின்னர் முகத்தைக் கழுவும் போது முகம் பளபளப்பாக இருக்கும்.
  • தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால், பளபளப்பான சருமத்திற்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக உள்ளது. தேன் கலந்து அல்லது தயிரை அப்படியே அப்ளை செய்யும் போது சருமத்தில் இருக்கும் லாக்டிக் அமிலம், மெல்லிய கோடுகளை குறைக்க உதவுகிறது. கரும்புள்ளிகளையும் அகற்றுகிறது. 
  • வாழைப்பழத் தோல்கள் பெண்களின் சருமத்தின் நிறத்தை மாற்றுவதற்கும் கருவளையங்களை நீக்கவும் உதவுகிறது.  எனவே வாழைப்பழத்தோலை உங்கள் தோலில் மெதுவாக தேய்க்கவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் தண்ணீரில் கழுவவும்.
  • ஒவ்வொரு நாளும் இரவில் பச்சைப் பாலை முகத்தில் தேய்க்கும் போது, சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிங்க: காட்டன் புடவைகளில் உங்களை டிரெண்டியாக்கும் ப்ளவுஸ் டிசைன்கள்!

 aloe vera apply skin

மேலும் படிங்க: நடனம் உடல் எடையை எப்படி வேகமாக குறைக்கும் தெரியுமா?

பெண்கள் பயன்படுத்தக்கூடிய சில அழகு சாதனப் பொருள்களில்  அவர்களின் முகத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படும் என்பதால் இனி வரும் காலங்களில்  இது போன்ற வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தி உங்களது சருமத்தை மேலும் அழகாக்குவதற்கு முயற்சி செய்ய மறந்து விடாதீர்கள்.

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]