தற்போதைய நவீன காலத்து பெண்களின் மிகப்பெரிய கனவு என்றால் அது தங்களின் முடி கூந்தல் நீளமாகவும், கருப்பு நிறத்தில் வளர வேண்டும் என்பதுதான். இதற்காக பெரும்பாலான பெண்கள் ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் பல்வேறு அழகு சாதன பொருட்களை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அதில் ரசாயனங்கள் அதிகமாக இருப்பதால் இளம் பெண்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை.
மேலும் படிக்க:கொத்து கொத்தாக முடியில் ஒட்டியிருக்கும் ஈறு, பேன், பொடுகை போக்க - இந்த ஒரு பொருள் போதும்
கேரள மாநிலத்தில் இருக்கும் பெரும்பாலான பெண்களின் கூந்தல் அடர் கருப்பு நிறத்தில் நீளமாக இருக்கும். இதற்கு அவர்களின் உணவு முறை பழக்க வழக்கம் காரணமாக இருந்தாலும், தலைமுடியை பராமரிப்பதில் அவர்கள் சில இயற்கையான பொருட்களைக் கொண்டு வீட்டு வைத்தியங்களை தயார் செய்து பயன்படுத்துகிறார்கள். தலை முடியை நீளமாகவும், முடி உதிர்தல், பேன், பொடுகு தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்ள கேரள பெண்களின் கூந்தலின் ரகசிய செய்முறை இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கேரள பெண்களின் நீளமான கூந்தல் ரகசியங்கள் & ஆகச்சிறந்த வீட்டு வைத்தியம்
தேவையான பொருட்கள்
- ஒரு கப் அரிசி ஊறவைத்தது
- செம்பருத்தி செடி இலைகள் 10
- செம்பருத்தி பூக்கள் 10
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 1 கப் அரிசியை எடுத்து நன்றாக கழுவி அதை ஊற வைத்து விடவும்.
- செம்பருத்தி செடி இலைகளை எடுத்து சிறிது சிறிதாக வெட்டி, அரிசி ஊறவைத்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் கூடுதலாக அதில் எடுத்து வைத்த 10 செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வைத்து அதிகமான தீயில் வேக வைக்கவும்.
- பாத்திரத்தில் உள்ள அரிசி பாதி அளவு வெந்து இருந்தாலே போதும்.
- இப்போது செம்பருத்தி இலை மற்றும் செம்பருத்தி பூவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் சேர்ந்திருக்கும்.
- நன்றாக கொதிக்க வைத்த பின்பு அப்படியே அதை எடுத்து வடிகட்டி தண்ணீரை மட்டும் தனியாக எடுக்கவும்.
- தனியாக எடுத்து வைத்த தண்ணீரை ஒரு நாள் முழுவதும் கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும்.
பயன்படுத்தும் முறை
- குளிக்க செல்வதற்கு முன் இந்த தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் விளக்கு எண்ணெய் கலந்து கொள்ளவும்.
- பின்னர் அந்த தண்ணீரை உள்ளங்கையில் ஊற்றி உச்சந்தலையில் வேர்க்கால்கள் படும் அளவிற்கு நன்றாக தடவும்.
- தேவைப்பட்டால் நன்றாக மசாஜ் செய்வது போல தலைமுடி முழுவதும் இந்த தண்ணீர் பரவி வரும் அளவிற்கு நன்றாக தடவவும்.
- 20 நிமிடம் நன்றாக ஊற வைத்த பின்பு, குளிக்க செல்லவும்.
- இதை பயன்படுத்திய பின்பு கண்டிஷனர் நீங்கள் பயன்படுத்த தேவையில்லை.
- வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினாலே போதுமானது.
வேகவைத்த அரிசி நீரின் நன்மைகள்
அரிசி நீரின் நன்மைகளைப் பொறுத்தவரை, இதை உங்கள் தலைமுடி பராமரிப்பு முறையில் சேர்ப்பது அதிசயங்களையும் செய்யலாம். அரிசி நீருடன் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிப்பது அதன் வலிமையையும் தோற்றத்தையும் மேம்படுத்தும். அரிசி நீரில் உள்ள அமினோ அமிலங்கள் சேதமடைந்த முடி நுண்குழாய்களை சரிசெய்யவும், முடி உடைப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. ஷாம்பு செய்த பிறகு, பளபளப்பு மற்றும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த அரிசி நீர் முடி சீரம் மூலம் உங்கள் தலைமுடியைக் கழுவவும். கூடுதல் நன்மைகளுக்கு, நீங்கள் புளித்த அரிசி நீரையும் பயன்படுத்தலாம், ஏனெனில் இது ஊட்டச்சத்துக்களின் செறிவை அதிகரிக்கிறது மற்றும் அதன் ஊட்டமளிக்கும் பண்புகளை அதிகரிக்கிறது.
செம்பருத்தி பூ மற்றும் செடி இலைகளின் நன்மைகள்
- சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாததாலும், முடியை சுத்தம் செய்யாததாலும் முடி உயிரற்றதாகி, உதிரத் தொடங்குகிறது. செம்பருத்திப் பூக்கள், இதைத் தடுக்க உதவும். செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகளில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் அமினோ அமிலங்கள். அவை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, புதிய முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன. அமினோ அமிலங்கள் உங்கள் முடியின் அடிப்பகுதியில் உள்ள செல்களில் கெரட்டின் உற்பத்தியைத் தூண்டி, ஆரோக்கியமான முடி வளர அனுமதிக்கிறது.
- நீங்கள் செம்பருத்தி பூக்களின் சாற்றைப் பிரித்தெடுத்து உங்கள் உச்சந்தலையில் தடவினால், உங்கள் உச்சந்தலையில் குளிர்ச்சியான உணர்வை உணருவீர்கள். இது சூரியக் கதிர்களால் உச்சந்தலை எரிவதைத் தடுக்கிறது. இதனால், இது உச்சந்தலையில் அதிக வெப்பமடைவதைத் தடுக்கிறது மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
- உச்சந்தலை வறண்டு போவதையும், பொடுகு ஏற்படுவதையும் தடுக்கிறது. இது உடல் வெப்பநிலையையும் ஒழுங்குபடுத்துகிறது.
வீட்டில் தயாரித்த வீட்டு வைத்தியத்தின் நன்மைகள்
- கேரளா பெண்கள் ரகசியமாக பின்பற்றும் வீட்டு வைத்தியமாக இது உள்ளது. இந்த செய்முறையில் உள்ள அனைத்து பொருட்களும் இயற்கையானது எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது .
- இந்த வீட்டு வைத்தியம் பத்து வயதில் இருந்து 50 வயது வரை உள்ள பெண்கள் தாராளமாக பயன்படுத்தலாம். இதை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் திரும்ப வளரும்.
- இதில் சேர்த்திருக்க கூடிய செம்பருத்தி பூ மற்றும் இலைகள் இரண்டுமே முடி உதிர்வை தடுத்து மீண்டும் அடர்த்தியாக வளரச் செய்யும்.
- செம்பருத்தி யில் வைட்டமின் அதிகமாக இருக்கிறது இது பெண்களின் தலையில் பொடுகு வராமல் பாதுகாக்கிறது இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆன்டி பாக்டீரியாக்கள் மயிர் கால்களை பலப்படுத்துகிறது தலையில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முடியை நீளமாக வளர செய்யும்.
- செம்பருத்தி பூ மற்றும் செம்பருத்தி இலைகளில் இருக்கும் குணங்கள் அரிசி நீரில் சேர்ந்திருக்கும்.
- உங்கள் முடி பார்ப்பதற்கு பளபளப்பாக சிக்கல் இல்லாமல் இருக்கும்.
மேலும் படிக்க:வெள்ளை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற 15 நாட்கள் போதும் - இப்படி செய்யுங்கள்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source:
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation