herzindagi
image

சருமத்தை இயற்கையாக பராமரிக்க உதவும் வெள்ளரிக்காய்; இப்படி பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்

சரும பராமரிப்பில் வெள்ளரிக்காயை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம். இது சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
Editorial
Updated:- 2025-09-18, 12:21 IST

வெள்ளரிக்காய் என்பது வெறும் சாலட் அல்லது பானங்களில் சேர்க்கப்படும் ஒரு பொருள் மட்டுமல்ல. இது சரும பராமரிப்பில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறந்த பொருளாகும். சருமத்திற்கு நீர்ச்சத்து அளிப்பது, எரிச்சலை போக்குவது, புத்துணர்ச்சி தருவது என பல வகைகளில் இது உதவுகிறது. எண்ணெய் பசை சருமம், கருவளையங்கள் என பலவிதமான சரும பிரச்னைகளுக்கும் வெள்ளரிக்காய் ஒரு சிறந்த தீர்வை வழங்குகிறது.

மேலும் படிக்க: தயிர் இருந்தால் போதும் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றலாம்!

 

வெள்ளரிக்காய் சாறை ஐஸ் கட்டிகளாக மாற்றி பயன்படுத்தும்போது சருமம் பொலிவு பெறுவதோடு, பல நன்மைகளையும் பெறுகிறது. அதன் நன்மைகளையும், அதைத் தயாரிக்கும் முறையையும் இதில் காண்போம்.

 

சரும எரிச்சலை போக்கும்:

 

வெள்ளரிக்காயின் முக்கியமான பயன்களில் ஒன்று, எரிச்சலும் வீக்கமும் அடைந்த சருமத்தை குணப்படுத்துவது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், சருமத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் அரிப்பு போன்ற பிரச்னைகளை உடனடியாக குறைக்க உதவுகிறது. சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாகும்.

Cucumber

 

வெள்ளரிக்காய் ஐஸ் கட்டிகள் தயாரிப்பது எப்படி?

 

முதலில், வெள்ளரிக்காயில் இருந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிது பன்னீர் சேர்க்கவும். இப்போது, ஒரு சுத்தமான ஐஸ் ட்ரேயில் இந்தச் சாறை ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். இது உறைந்த பின்னர், தினமும் இதை சருமத்தில் தேய்க்கலாம். இது உடனடி புத்துணர்ச்சியையும், நாளடைவில் மென்மையான சருமத்தையும் தரும்.

மேலும் படிக்க: பொலிவான சருமத்திற்கு உதவும் 5 பாரம்பரிய பொருட்கள்; உங்கள் சரும பராமரிப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்

 

வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு சிறந்த மருந்து:

 

வெள்ளரிக்காயின் குளிர்ச்சியான பண்புகள், வெயிலால் பாதிக்கப்பட்ட சருமத்திற்கு உடனடியாக நிவாரணம் அளித்து, எரிச்சலையும், தோலுரிதலையும் குறைக்கும். இது உணர்திறன் வாய்ந்த சருமம் மற்றும் பருக்கள் உள்ளவர்களுக்கும் ஏற்றது. சருமத்திற்கு தேவையான நீர்ச்சத்தையும், ஊட்டச்சத்தையும் இது வழங்குகிறது. சருமத்தை பிரகாசமாக்கவும், நீர்ச்சத்து பெறவும் இந்த வெள்ளரிக்காய் ஐஸ் கட்டிகளை உடனடியாக பயன்படுத்த தொடங்கலாம்.

Cucumber for skin

 

முகப்பரு மற்றும் எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற தீர்வு:

 

உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் மற்றும் முகப்பரு பிரச்னை இருந்தால், வெள்ளரிக்காய் ஒரு இயற்கை தீர்வாக அமையும். இது அதிகப்படியான எண்ணெய்யை கட்டுப்படுத்தி, சருமத் துளைகள் அடைபடுவதை தடுக்கிறது. மேலும், இது முகப்பருவால் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, சருமத்தை சீரானதாக மாற்ற உதவுகிறது. சரும நிறத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் இது ஒரு சிறந்த வழி.

 

கண்களில் ஏற்படும் சோர்வை குறைக்கும்:

 

வெள்ளரிக்காயின் துண்டுகளை கண்களின் மேல் வைப்பது, சோர்வான கண்களுக்கும், கருவளையங்களுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு பாரம்பரிய முறையாகும். கண்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், கருவளையங்களை போக்கவும் இது உதவுகிறது. மேலும், இது சுருக்கங்கள், வயதான தோற்றம் போன்றவற்றை எதிர்த்து போராடி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இளமையான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற இது ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]