herzindagi
use this natural cream daily mai

Homemade Face Cream in Tamil: முகத்தின் பொலிவை அதிகரிக்க வீட்டிலேயே சுலபமாக கிரீம் செய்யலாம்

முகம் பொலிவிழந்து இருந்தால், இந்த கிரீமை வீட்டிலேயே சுலபமாக தயாரித்து பயன்படுத்தலாம். <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-01-19, 10:28 IST

தினமும் வெளியில் செல்வதால் முகம் பொலிவிழந்துவிடும். சருமம் கருமையாக மாறுவதோடு மட்டுமல்லாமல், மூக்கைச் சுற்றி கரும்புள்ளிகள், பருக்கள் போன்ற பிரச்சனைகளும் வர தொடங்கும். இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்காக பல வகையான அழகு சாதனப் பொருட்களை நாம் பயன்படுத்துகிறோம்.

ஆனால் கடைகளில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களில் ரசாயனம் உள்ளது. இதனால் முகத்தில் பருக்கள் வரும். மேலும் சருமம் மோசமாகிவிடும். அதனால் முகத்தைப் பராமரிக்க வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

இயற்கையான பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஃபேஸ் கிரீம் தயார் செய்யலாம். இதற்காக நீங்கள் அதிக பணம் கூட செலவழிக்க வேண்டியதில்லை. இந்த பதிவில் வீட்டிலேயே சுலபமாக ஃபேஸ் கிரீம் தயார் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

கோகோ வெண்ணெய் கிரீம்

use this natural cream daily

கோகோ வெண்ணெய் முகத்தை மாய்ஸ்சுரைஸ் செய்து ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது, இதனை தினமும் பயன்படுத்துவதன் மூலம் முகத்தின் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். இந்த கிரீம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • 4 டேபிள்ஸ்பூன்- கோகோ வெண்ணெய்
  • 1 டீஸ்பூன்- ரோஸ் வாட்டர்
  • 2 டீஸ்பூன்- தேங்காய் எண்ணெய்
  • 2 டீஸ்பூன்- ஆலிவ் எண்ணெய்

செய்முறை

  • இதைச் செய்ய, எல்லா பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சூடாக்கவும்.
  • அனைத்து பொருட்களும் நன்றாக கரைந்து ஒன்றாகும் வரை அதை கொதிக்க விடவும்.
  • இப்போது அடுப்பை அணைத்து, அதனை ஆற விடவும்.
  • இப்போது கிரீம் தயாராகிவிட்டது.
  • நீங்கள் இதை சிறிய பெட்டியில் போட்டு வைத்துக்கொள்ளலாம்.
  • இந்த கிரீமை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.

குறிப்பு- உங்களுக்கு எண்ணெய் பிசுக்கு சருமம் இருந்தால் இந்த கிரீம் பயன்படுத்த வேண்டாம்.

அலோ வேரா கிரீம்

use this natural cream daily

நீங்கள் மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை விரும்பினால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவது மிகவும் முக்கியம். கற்றாழையில் சாலிசிலிக் அமிலம் உள்ளது, இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. வீட்டிலேயே கற்றாழை கிரீம் தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்

  • 4 டீஸ்பூன்- அலோ வேரா ஜெல்
  • 2 டீஸ்பூன்- தேங்காய் எண்ணெய்
  • ½ டீஸ்பூன்- வைட்டமின் E எண்ணெய்
  • சில துளிகள் - எசென்ஷியல் எண்ணெய்
  • 1 டீஸ்பூன்- கோகோ கிரீம்

செய்முறை

  • இந்த கிரீம் செய்ய, கற்றாழை ஜெல்லை ஒரு மிக்சியில் போடவும்.
  • பிறகு மைக்ரோவேவ் அல்லது டபுள் பாய்லரில் தேங்காய் எண்ணெயை உருக்கிக் கொள்ளவும்.
  • பின் அதையும் மிக்சியில் போடவும். மேலும், வைட்டமின்-E எண்ணெய் சேர்க்கவும்.
  • இந்த கலவையை சில நிமிடங்கள் கலக்கவும்.
  • அதன் பிறகு உங்களுக்கு விருப்பமான எசென்ஷியல் எண்ணெயின் சில துளிகள் சேர்த்து கிரீமை பயன்படுத்தவும்.

இதுவும் உதவலாம்- Homemade Face Scrub in Tamil: குளிர்காலத்தில் எண்ணெய் பிசுக்கு சருமத்திற்கு வீட்டிலேயே ஸ்க்ரப் தயார் செய்யலாம்!!!


இந்த விஷயங்களை மறந்துவிடாதீர்கள்

use this natural cream daily

  • வயதாக ஆக, முகம் வறண்டு, சுருக்கங்கள் பிரச்சனை வரும். அப்போது முகத்தை மாய்ஸ்சுரைஸ் செய்வது மிகவும் நல்லது.
  • நீங்கள் வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் தயாரித்து பயன்படுத்தலாம். வெள்ளரிக்காயை சருமத்தில் தடவலாம், இதுவும் நன்மை பயக்கும்.
  • உங்கள் முகத்தில் பருக்கள் இருந்தால், ரெடினாய்டு பயன்படுத்துங்கள், இது சுருக்கங்கள் வராமல் தடுக்கும்.

குறிப்பு- கிரீமின் நன்மைகள் மற்றும் தீமைகள் சரும வகையை சார்ந்தது. எனவே முதலில் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும்.

இதுவும் உதவலாம்: வெள்ளை முடி பிரச்சனையை சரிசெய்யும் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்!!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்

Image Credit: Freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]