herzindagi
image

உங்கள் கூந்தலை அடர்த்தியாக மாற்ற உதவும் சியா விதைகள்; இந்த நேரத்தில் எடுத்துக் கொண்டால் கூடுதல் நன்மைகள்

உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சியா விதைகளின் பங்கு என்னவென்று இதில் காண்போம். மேலும், இதனை எடுத்துக் கொள்ளும் நேரம் மற்றும் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2025-10-03, 14:39 IST

கூந்தலை ஆரோக்கியமாக பராமரிப்பதில் சியா விதைகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த சிறிய விதைகளை, சரியான முறையில் காலையில் உட்கொண்டால், உங்கள் கூந்தல் ஆரோக்கியம் வியத்தகு வகையில் மேம்படும்.

மேலும் படிக்க: முடி உதிர்வா? இனி கவலை வேண்டாம்; இந்த 5 புரதச் சத்து நிறைந்த உணவுகளே போதும்

 

அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் உணவு முறை மாற்றங்களால், பலருக்கும் தலைமுடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முடி வளர்ச்சிக்கு வெளிப்புற பராமரிப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் ஊட்டச்சத்துகள் ஆகும். சியா விதைகளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. இதன் மூலம் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு தேவையானவற்றை பெறலாம்.

 

சியா விதைகள் மூலம் கிடைக்கும் நன்மைகள்:

 

சியா விதைகளுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அழற்சியை குறைத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதனால், முடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, முடி உறுதியாகவும், பளபளப்பாகவும் வளர உதவுகின்றன.

Chia seeds

 

முடி பெரும்பாலும் புரதத்தால் (கெரட்டின்) ஆனது. சியா விதைகள் நல்ல தாவர அடிப்படையிலான புரதத்தை வழங்குவதன் மூலம் முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றன. சியா விதைகளில் உள்ள அன்டிஆக்ஸிடென்ட்கள், கூந்தலை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகின்றன.

 

இரும்புச்சத்து மற்றும் சின்க் ஆகியவை முடி வளர்ச்சிக்கு அத்தியாவசியமானவை. இவை முடியின் வேர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதை மேம்படுத்துவதன் மூலம் முடி உதிர்வை குறைக்க உதவுகின்றன. இது போன்ற பல சத்துகள் சியா விதைகளில் இருப்பதால், கூந்தல் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கிறது.

மேலும் படிக்க: முடி வளர்ச்சிக்கு கடுகு எண்ணெய்; அடர்த்தியான கூந்தலை பெற இதை ட்ரை பண்ணுங்க

 

காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சியா விதைகளை சாப்பிடுவது உங்களுக்கு ஆற்றல் அளிப்பதுடன், உங்கள் முடியின் வேர்க்கால்களுக்கும் தேவையான ஊட்டச்சத்தை கொடுத்து ஆரோக்கியமான வளர்ச்சியை தூண்டுகிறது.

 

காலையில் சியா விதைகளை உட்கொள்ள எளிய வழிகள்:

 

ஒரு டேபிள்ஸ்பூன் சியா விதைகளை இரவு முழுவதும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில், விதைகள் ஊறி ஜெல் போன்ற தன்மைக்கு மாறியிருக்கும். இதைக் குடிப்பதற்கு முன், அதில் பாதி எலுமிச்சை சாறை பிழிந்து கலக்கவும்.

Chia seeds

 

இது புத்துணர்ச்சி அளிக்கும் ஊட்டச்சத்து நிறைந்த பானமாகும். இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதுடன், உங்கள் முடிக்கு தேவையான சத்துகளை வழங்கி கூந்தல் வலிமையாக இருக்க உதவுகிறது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]