15 நாளில் முடி உதிர்வை தடுத்து நிறுத்த வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த எண்ணெயை பயன்படுத்துங்கள்

உங்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டுகிறதா? குளிக்கும்போதும் இரவு தூங்கி எழும்போதும் அதிகப்படியான முடி உதிர்வு இருக்கிறதா? முடி உதிர்வை 15 நாட்களில் தடுத்து நிறுத்த இந்த பதிவில் உள்ள இயற்கையான  எண்ணெயை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துங்கள். தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து, தலை முடி நீளமாக அடர் கருப்பு நிறத்தில் வளர தொடங்கும். இந்த  எண்ணெயை தயாரிப்பதற்கான எளிய செய்முறை இந்த பதிவில் விரிவாக உள்ளது.
image

மற்றவர்களுக்கு முடி உதிர்தல் என்பது ஒரு பொதுவான விஷயம் என்றாலும், முடி உதிர்ந்தவர்கள் மட்டுமே விரக்தி நிலையை அடைகிறார்கள். ஏனெனில் முடி உதிர்தல் விரைவில் முடி மெலிந்து போகும். இது இறுதியில் வழுக்கைக்கு வழிவகுக்கும். இது உண்மையில் ஒரு நபரின் தன்னம்பிக்கையை பாதிக்கும். அதிக அளவில் முடி உதிர்ந்தால், அது என்ன காரணம் என்று பதட்டத்தை ஏற்படுத்தும்.'

நாளில் முடி உதிர்வை தடுத்து நிறுத்த வீட்டில் தயாரிக்கப்பட்ட எண்ணெய்

ghee-for-long-thick-and-shiny-hair-1728054395941-1728749296503-(5)-1751130792256

முடி உதிர்வு அதிகமாக உள்ளது முடி வளரவே இல்லை என நினைப்பவரா நீங்கள்? வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த எண்ணெயை தொடர்ந்து பதினைந்து நாட்கள் உபயோகித்து பாருங்கள். அதிலும் குறிப்பாக முன் நெற்றியில் உள்ள முடி உதிர்தலை சந்திக்கும் பெண்களுக்கு இது நல்ல பலனை தரும். இந்த எண்ணையை தொடர்ந்து உபயோகித்து வருவதால் தலையில் புதிய முடிகள் உருவாகும். ஒரு வாரத்தில் முடி உதிர்தல் கட்டுக்குள் வரும். மேலும் தலையில் தோன்றும் அரிப்பு, ஈறு, பேன்கள் குறையும். குறிப்பாக தலையில் அதிகமாக உள்ள பொடுகு சரியாகும். மேலும் இந்த எண்ணெயை தொடர்ந்து உபயோகித்து வருவதால் உங்கள் தலைமுடி கேரோட்டின் ட்ரீட்மென்ட் எடுத்தது போல் பளபளப்பாக இருப்பதை காணலாம்.

தேவையான பொருட்கள்

  • கற்றாழை ஜெல்
  • 10 புதினா இலைகள்
  • ஒரு கப் தேங்காய் எண்ணெய்
  • ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்
  • ஒரு டீஸ்பூன் வெந்தயம்
  • ஒரு கப் ஆமணக்கு எண்ணெய்

படிப்படியான செய்முறை

  • ஐந்து கற்றாழையை எடுத்து அதனை நன்கு கழுவி விட்டு கற்றாழையில் உள்ள ஜெல்லை தனியாக பிரித்து எடுக்கவும்.
  • இப்போது கற்றாழை ஜெல்லை மிக்சி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது மிக்ஸி ஜாரில் சேர்த்த கற்றாழையை நன்கு அரைத்துக் கொள்ளவும். நுரை போல் பொங்கி இருக்க வேண்டும்.
  • இப்போது அரைத்த மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துள்ள கற்றாழை பேஸ்டுடன் 10 புதினா இலைகள் சேர்த்துக் கொள்ளவும்.
  • இப்போது கற்றாழை ஜெல் பேஸ்டுடன் புதினா இலைகளை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்து வைத்த கற்றாழை புதினா பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கற்றாழை பேஸ்ட் மற்றும் எந்த கப்பில் கற்றாழை பேஸ்டு எடுத்தீர்களா அதே கப்பில் ஒரு கப் தேங்காய் எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் நன்கு கலக்கி விடவும்.
  • குறைந்தது 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை நன்கு கலக்கவும். குறிப்பாக அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து நன்கு கலக்கவும்.
  • இப்படிச் செய்யும்போது கற்றாழையில் உள்ள அழுக்குகள் மேல் எழும்பி நுரை போல் வரும் கரண்டியால் அதனை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது அடுப்பில் வைத்துள்ள எண்ணெயில் ஈர சலசலப்பு அடங்கி வரும்போது ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம் ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து உடனே அடுப்பை அணைத்து விடுங்கள். இல்லை என்றால், எண்ணெயின் பதம் மாறிவிடும்.
  • இப்போது தயாரித்து வைத்துள்ள எண்ணெய்யை நன்கு ஆறவிடுங்கள். இப்போது தயாரித்து வைத்துள்ள எண்ணெய்யை ஒரு பாட்டிலில் சேகரித்துக் கொள்ளுங்கள்.
  • பாட்டிலில் 75 சதவிகிதம் தயாரித்த எண்ணெய் உள்ளது என்றால் மீதம் உள்ள 25 சதவிகிதம் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது இந்த எண்ணையை நன்கு ஒரு ஸ்பூனால் கலந்து விட்டுக் கொள்ளுங்கள்.
  • இப்போது முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை தூண்டும் ஹோம் மேட் ஹேர் ஆயில் தயார். இ
  • தனை வெளியில் வைத்து எவ்வளவு நாள் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
  • குறிப்பாக இதனை குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தலையில் தேய்த்து ஊற விட்டு பின்னர் குளித்து வாருங்கள் இதனால் பொடுகு நீங்கும்.
  • இந்த எண்ணெயை தொடர்ந்து உபயோகிப்பதால் முடி நன்கு கரு கருவென வளரும்.

முடி வளர்ச்சிக்கு கற்றாழை நன்மைகள்

முடி உதிர்தல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் தொற்றுநோய்களால் ஏற்படுகின்றன. தூசி மற்றும் முறையற்ற பராமரிப்பு நடவடிக்கைகள் தலையில் பொடுகு, வீக்கம், அரிப்பு, முடி உதிர்தல் மற்றும் பேன் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற சமயங்களில், முடி பொதுவாக அதன் ஆரோக்கியத்தை இழக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு எளிதான வீட்டு வைத்தியம் கற்றாழை சாற்றைப் பயன்படுத்துவது. கற்றாழை தொற்றுகள் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் பிரச்சினைகளை மிக விரைவாக நீக்குகிறது.

கற்றாழை இயற்கையிலேயே தண்ணீரை உறிஞ்சும் திறன் கொண்டது. தண்ணீரில் கலக்கும்போது இது சிறப்பாக செயல்படும். உங்கள் தலைமுடியைக் கழுவப் பயன்படுத்தும் தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி கற்றாழை ஜெல் அல்லது சாறு சேர்த்து குளிக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு மற்றும் கண்டிஷனரில் இரண்டு சொட்டு தேயிலை மர எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல் அல்லது சாறு சேர்த்து உங்கள் தலைமுடியைப் பராமரிக்கலாம்.

மேலும் படிக்க:இந்த 2 பொருட்களை கடுகு எண்ணெயுடன் சூடாக்கி கலந்து தடவினால், ஒரு வாரத்தில் முடி வளரத் தொடங்கும்

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள்.

image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP