நரைமுடியை மீண்டும் கருப்பாக்க முடியுமா? மருதாணி மற்றும் காபியை இப்படி பயன்படுத்தி பாருங்க

வாரம் ஒரு முறை இந்த காபி மருதாணி கலவையை பயன்படுத்தி, நரைமுடியை இயற்கையாக மறைக்கலாம். மேலும், இது முடியை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
image

இன்றைய நவீன வாழ்க்கை முறை, மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மரபணு காரணிகளால் வயதுக்கு முன்பே நரைமுடி தோன்றுவது நம்மில் பலருக்கும் பொதுவான பிரச்சினையாகிவிட்டது. நரைமுடியால் தோற்ற அழகு குறைந்து, தன்னம்பிக்கை குன்றிய நிலை ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய பலர் இரசாயன சாயங்களையும் ஹேர் டைகள் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை முடி வளர்ச்சியை பாதிக்கும் தன்மை கொண்டவை என்று கூறப்படுகிறது. எனவே, இயற்கையான முறையில் நரைமுடியை மறைக்க மருதாணி (ஹென்னா) மற்றும் காபி சிறந்த தீர்வாக அமைகின்றது. இதை எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நரைமுடி ஏன் தோன்றுகிறது?


முடியின் இயற்கையான நிறத்தை மெலனின் எனப்படும் நிறமி தீர்மானிக்கிறது. வயது அதிகரிக்கும் போது, மெலனின் உற்பத்தி குறைந்து முடி நரைக்கத் தொடங்குகிறது. மேலும், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, புகைப்பழக்கம் மற்றும் ரசாயன முடி சிகிச்சைகளும் நரைமுடிக்கு காரணமாகின்றன.

grey hair

மருதாணியின் பண்புகள்:


மருதாணி இயற்கையான முடி நிறமூட்டியாக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இது முடியை கருமையாக்குவது மட்டுமல்லாமல், பின்வரும் நன்மைகளையும் தருகிறது:

  • முடியின் இயற்கையான கட்டமைப்பை பலப்படுத்துகிறது.
  • பொடுகு, தோல் எரிச்சல் போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.
  • முடி உதிர்வதை தடுக்கிறது.
  • முடிக்கு மினுமினுப்பையும் கவர்ச்சியையும் அளிக்கிறது.

henna

காபியின் பயன்கள்:


காபி முடியின் நிறத்தை இயற்கையாக கருமையாக்கும் திறன் கொண்டது. இதில் உள்ள கஃபீன் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் முடி வளர்ச்சியை தூண்டுகின்றன. காபியின் முக்கிய நன்மைகள்:

  • முடியின் இயற்கையான கருப்பு-பழுப்பு நிறத்தை ஊக்குவிக்கிறது.
  • முடி மினுமினுப்பை அதிகரிக்கிறது.
  • முடி வேருக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது.
  • முடி உதிர்வதை குறைக்கிறது.

coffee

மருதாணி மற்றும் காபி கலவை தயாரிப்பு முறை:


நரைமுடியை இயற்கையாக மறைக்க இந்த எளிய வீட்டு வழிமுறையை பின்பற்றலாம்.


தேவையான பொருட்கள்:

  • 2 டேபிள் ஸ்பூன் மருதாணி தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் காபி தூள்
  • 1 கப் தண்ணீர்
  • 1 டீஸ்பூன் தயிர்

மேலும் படிக்க: சருமம் தங்கம் போல மினுமினுக்க; வெறும் வயிற்றில் இந்த டீடாக்ஸ் பானங்களை குடிச்சு பாருங்க

தயாரிப்பு முறை:

  • ஸ்டெப் 1: ஒரு பாத்திரத்தில் மருதாணி தூள் மற்றும் காபி தூளை சேர்த்து கலக்கவும்.
  • ஸ்டெப் 2: சூடான தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, மென்மையான பேஸ்ட் போல கலக்கவும்.
  • ஸ்டெப் 3: தேவைப்பட்டால், முடி மென்மைக்கு இதில் தயிர் சேர்க்கவும்.
  • ஸ்டெப் 4: இந்த கலவையை சுத்தமான முடியில் சீராக பூசவும்.
  • ஸ்டெப் 5: 2-3 மணி நேரம் இதை உலர விட்டு, பின்னர் மிதமான ஷாம்பூவால் முடியை கழுவவும்.

இரசாயன சாயங்களை விட மருதாணி மற்றும் காபி கலவை முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் பாதுகாப்பானது. வாரம் ஒரு முறை இந்த கலவையை பயன்படுத்தி, நரைமுடியை இயற்கையாக மறைக்கலாம். மேலும், இது முடியை கவர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். எனவே, பல நன்மைகளை வழங்கும் இந்த இயற்கை முறையை ட்ரை செய்து உங்கள் முடியை பராமரிக்கலாம்.

Image source: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP