vettiver face pack

குளிர்காலத்தில் சருமம் வறண்டுவிட்டதா? வெட்டிவேர் பேஸ் பேக்கை முயற்சி செய்யுங்கள்!

வெட்டிவேர் வாசத்திற்கு மட்டுமல்ல பருவ காலங்களில் ஏற்படக்கூடிய அனைத்து சரும பிரச்சனைகளையும் சட்டென்று சரிசெய்யும் வகையில் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உடன் கொண்டுள்ளது.
Editorial
Updated:- 2025-11-27, 19:41 IST

நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய பாராம்பரியமானப் பொருள்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது வெட்டி வேர். தர்பை புல் வகையை சேர்ந்த வெட்டி வேர்களின் முக்கியத்துவம் அறிந்து இன்றைக்கு பல நாட்டு மருந்துக் கடைகளில் வெட்டி வேர் அதிகளவில் விற்பனையாகிறது. பெரும்பாலும் மக்கள் வெட்டி வேரை தங்களுடைய அழகை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்தி வருகின்றனர். தலைமுடி வளர்ச்சி முதல் சரும பராமரிப்பிலும் வெட்டி வேர் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பவுடர் சருமத்தைச் சுத்தம் செய்வதோடு எப்போதும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கிறது. குளிக்கும் நீரில் வெட்டி வேரைக் கலந்து பயன்படுத்தும் போது தோல் அரிப்பு போன்ற சருமம் சார்ந்த பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். குளிர்காலத்தில் சருமத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க எப்படியெல்லாம் வெட்டிவேர் பயன்படுத்தலாம்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.

குளிர்கால சரும பராமரிப்பில் வெட்டிவேர்:

குளிர்ந்த காற்று மனதிற்கும், உடலுக்கும் இதமாக இருந்தாலும், பல நேரங்களில் வைரஸ் தொற்று பாதிப்புகள் உள்பட சருமத்திற்கும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதிகப்படியான காற்று உடலின் நீர்சசத்துக்களை இழக்கச் செய்வதோடு சருமத்தை வறண்டு விட செய்கிறது. கொஞ்சம் கூட ஈரப்பதம் இல்லாத போது முகப்பருக்கள், முகத்தில் ஆங்காங்கே வெள்ளை நிறத்தில் வடுக்கள் அதிகளவில் ஏற்படக்கூடும்.

மேலும் படிக்க:  Winter Skin Care Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தின் பொலிவை தக்கவைக்க உதவும் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக் இதோ

முகப்பருவைத் தீர்க்கும் வெட்டிவேர்:

குளிர்காலங்களில் நிலவும் குளிர், வறண்ட காற்று மற்றும் ஈரப்பதம் இல்லாமை போன்ற காரணங்களால் முகப்பருக்கள் அதிகளவில் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் ஒரு சிறிய பாத்திரத்தில் வெட்டிவேர்களுடன் சிறிது கடுக்காயை சேர்த்த தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் இவற்றை மிக்ஸியில் அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் இடங்களில் தடவினால் போதும். இதில் உள்ள ஆஜ்ஸிஜனேற்ற எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகளால் முகத்தில் பருக்களும், தழும்புகளும் குறையக்கூடும்.

வெட்டிவேர் தரும் அற்புத நன்மைகள்:

  • முகப்பருக்களை மட்டுமல்ல சருமத்திற்கு பல வகைகளில் வெட்டிவேர் உதவியாக உள்ளது. குறிப்பாக இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் குளிர்ச்சியூட்டும் பண்புகளால், சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக்கவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
  • வெட்டிவேரில் உள்ள குளிரூட்டும் பண்புகள் சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சி, தோல் அரிப்பு, ஒவ்வாமை போன்ற பாதிப்புகளைத் தவிர்க்கிறது.

மேலும் படிக்க: வெல்லம் பயன்படுத்தி முடி மற்றும் சரும பிரச்சனைகளை எப்படி தீர்க்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம்

  • வெட்டிவேர் இயற்கையான மாய்சுரைசாக செயல்படுவதால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்கிறது. குறிப்பாக செபாசியஸ் சுரப்பிகள் சருமத்தை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
  • வெட்டிவேர் பவுடரை தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டரில் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவும் போது, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

Image source- Freepik

 

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]