பசு நெய்யை பாதத்தில் பயன்படுத்துவதால் கிடைக்கும் 2 நன்மைகள்

பசு நெய்யை பாதத்தில் பயன்படுத்துவதால் பாதம் மென்மையாகும். 2 நாளில் பித்த வெடிப்பும் நீங்கும், எப்படி என படித்தறியலாம்.

cow ghee big

பசு நெய்யை நாம் சமையலுக்காக பயன்படுத்துகிறோம். இது நாம் உண்ணும் உணவில் உள்ள சுவையை கூட்டுகிறது. மேலும், ஊட்டச்சத்து நிறைந்ததும் கூட. நெய், நம்முடைய செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவுவதாக நம்பப்படுகிறது. கைகள் மற்றும் கால்களில் பசு நெய்யை தடவ அறிவுறுத்தப்படுகிறது. இதன் நற்குணங்கள் காரணமாக, சிறந்த ஈரப்படுத்தியாக செயல்பட்டு, சருமத்தை ஈரப்பதம் நிரம்ப வைத்துக்கொள்ள உதவுகிறது. பசு நெய்யினை கொண்டு வறண்ட பாதங்களையும், பித்த வெடிப்புகளையும் சரிசெய்ய முடியும்.

வறண்ட பித்தவெடிப்புகள் உடைய குதிகால்களுக்கு நெய் ஈரப்பதத்தை வழங்குகிறது. இதனால் காயங்கள் ஆறி பித்தவெடிப்பு சரியாகிறது. உங்களுக்கு வரும் பித்த வெடிப்புகளை முறையாக கவனிக்காவிட்டால், அது மோசமான விளைவை உண்டாக்கக்கூடும். வீட்டில் இருந்தபடியே பித்த வெடிப்பை சரி செய்து, பாதத்தை மென்மையாக வைத்துக்கொள்ள நீங்கள் ஆசைப்பட்டால், அதற்கு பசு நெய் சிறந்ததாக இருக்கும். இதனை தூங்க செல்வதற்கு முன் தடவி கொள்வதால் பித்த வெடிப்பு சரியாகும்.

இதனில் தேவையான கொழுப்பு அமிலம் உள்ளது. இது நீர்ச்சத்தை தக்க வைத்துக்கொள்ள உதவி, இறந்த சரும செல்களை புதுப்பிக்கவும் உதவுகிறது. இதனால் உங்களுடைய சருமம் மென்மையடையும். இந்த பதிவின் மூலமாக பசு நெய்யை வைத்து செய்யக்கூடிய 2 ரெசிபிக்களை நாங்கள் உங்களுடன் பகிர்கிறோம். இதனால் உங்கள் பாதங்கள் அழகாக, மென்மையாகவும் இருக்க தொடங்கும்.

பசு நெய், மஞ்சள் மற்றும் வேப்பெண்ணெய்

cow ghee

நெய், உங்களின் சருமத்தில் உள்ள காயங்களை குணப்படுத்தும். மஞ்சளும், காயங்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. வேம்பில் பூஞ்சை எதிர்ப்பு பண்பும், பாக்டீரியா எதிர்ப்பு பண்பும் உள்ளது. இதனை மஞ்சளுடன் கலந்து பயன்படுத்தும்போது சருமம் மென்மை அடைவதோடு மட்டுமல்லாமல், வலி மற்றும் காயங்களையும் குணப்படுத்தும்.

தேவையான பொருட்கள்

  • நெய் - 1 டேபிள்ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
  • வேப்பெண்ணெய் - 1 டீஸ்பூன்

என்ன செய்வது?

  • ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடுபடுத்தவும். அதனோடு மஞ்சள் மற்றும் வேப்பெண்ணய்யை கலந்துக்கொள்ளவும்
  • அதன்பிறகு, உங்கள் பாதத்தை அலசி துடைக்கவும்
  • இப்போது தயாரித்து வைத்திருக்கும் பேஸ்டை இரவு தூங்க செல்லும் முன்பு பாதத்தில் தடவி இரவு முழுக்க வைத்திருக்கவும்
  • காலையில் பாதத்தை கழுவிய பிறகு, வெதுவெதுப்பான நெய்யை தடவி விட்டுவிடவும்
  • 2 நாட்களில் உங்கள் கால்களில் உண்டான வலி குறைவதை உங்களால் உணர முடியும். மேலும் சருமமும் மென்மையாக இருக்கும்

நெய், தேன்மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய்

cow ghee

தேங்காய் எண்ணெய்யில் உள்ள இயற்கை வளங்கள் சரும செல்களை சீரமைக்க உதவுகிறது. மேலும் சருமத்தை ஈரப்பதத்தோடு வைத்துக்கொள்ள உதவுகிறது. மெழுகு, உங்களின் பாதத்தில் மென்மையான அடுக்கை உருவாக்கி, மேலும் வெடிக்காமல் பார்த்துக்கொள்ளும். இதனோடு சேர்த்து, சருமத்தை குணமாக்கவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

  • நெய் - 1 டேபிள்ஸ்பூன்
  • தேன் மெழுகு - ½ கப்
  • தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

என்ன செய்வது?

  • ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடுபடுத்தவும். அதன்பிறகு, தேன் மெழுகையும், தேங்காய் எண்ணெய்யையும் கலந்து சூடுபடுத்தவும்
  • இப்போது படிகக்கல் கொண்டு பாதத்தை சுரண்டவும். பிறகு, வெதுவெதுப்பான நீரால் காலை கழுவி காய வைக்கவும்
  • நெய் கொண்டு தயாரித்து வைத்திருக்கும் மாஸ்க்கை உங்கள் குதிகால் மற்றும் கால் முழுவதும் தடவி இரவு முழுக்க வைத்திருக்கவும்
  • மறுநாள் காலை பாதத்தை கழுவிவிட்டு, நெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை தடவலாம்
  • இந்த செய்முறை, விரைவில் உங்கள் கால்களுக்கு இதமளிக்கிறது. வெடிப்புடன் காணப்படும் குதிகால்கள் மெல்ல சீராகின்றன.
cow ghee

ஒருவேளை எதுவும் செய்ய உங்களுக்கு விருப்பமில்லை எனில், தினமும் வெதுவெதுப்பான நெய்யை மட்டும் கொண்டு மசாஜ் செய்து வரலாம். இதன் காரணமாக, உங்கள் பாதத்தை நன்றாக உணர வைக்கும். உங்களின் கால்கள் சோர்வடைவதும் நீங்கும். மேலும் நல்ல தூக்கத்தையும் நீங்கள் பெறுவீர்கள்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: shutterstock,freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP