
பொலிவான சருமத்தை பெறுவதில், நாம் உண்ணும் உணவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் சிகிச்சைகள் ஆகியவை முக்கிய இடம் பெற்றாலும், ஆரோக்கியமான சருமத்திற்கு ஊட்டச்சத்துகள் அவசியம்.
மேலும் படிக்க: பளபளப்பான சருமம் வேண்டுமா? இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி மசாஜ் செய்யவும்
வைட்டமின்கள், அன்டிஆக்ஸிடன்ட்கள், தாதுக்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள், உங்கள் சருமத்தை சீராக பராமரிக்க உதவும். அவற்றை இதில் காணலாம்.
சருமத்திற்கு மிகவும் உகந்த காய்கறிகளில் கேரட்டும் ஒன்றாகும். இதில் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது வைட்டமின் ஏ-வின் ஒரு வடிவம் ஆகும். இது தீங்கு விளைவிக்கும் புறஊதா கதிர்களிலிருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. வைட்டமின் ஏ, சரும ஆரோக்கியத்தை பராமரிக்க இன்றியமையாதது. கேரட்டில் உள்ள அன்டிஆக்ஸிடன்ட்கள், சரும செல்களை சேதப்படுத்தி முதுமையை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. கேரட்டை தொடர்ந்து சாப்பிடுவது சரும வறட்சியை தடுக்கவும், அதன் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவும்.

தக்காளி, லைகோபீன் (lycopene) எனப்படும் ஆற்றல் மிகுந்த ஆன்டிஆக்ஸிடன்ட் நிரம்பியது. இது புறஊதா கதிர்களால் ஏற்படும் சேதங்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. தக்காளியை தொடர்ந்து உட்கொள்வது சருமத்தின் முதுமையை தடுக்கவும், சரும அமைப்பை மேம்படுத்தவும் உதவும். லைகோபீன், கொலஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கவும் உதவுகிறது. இது சருமத்தின் உறுதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க முக்கியமானது. லைகோபீன் தவிர, தக்காளியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலஜன் உற்பத்திக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். கொலஜன் தான் சருமத்தை உறுதியாகவும், மென்மையாகவும், இளமையாகவும் வைத்திருக்கிறது.
மேலும் படிக்க: கூந்தல் அடர்த்தியாக வளர உதவும் ஊட்டச்சத்துகள்; இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க மக்களே
இதனை வெண்ணெய் பழம் என்று அழைக்கின்றனர். இதில் ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் (monounsaturated fats) நிறைந்துள்ளன. இவை உங்கள் சருமத்தை நீரேற்றத்துடனும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இது வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்கிறது. உங்கள் சருமம் உள்ளிருந்து போதுமான நீரேற்றத்துடன் இருக்கும் போது, அது மிருதுவாகவும், மென்மையாகவும் காட்சியளிக்கிறது. ஆரோக்கியமான கொழுப்புகள் தவிர, இதில் வைட்டமின் ஈ மற்றும் சி நிரம்பியுள்ளன.

கீரை ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது சரும செல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் உங்கள் சருமம் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. கீரையில் வைட்டமின்கள் ஏ, சி, மற்றும் கே உட்பட ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. இது சருமத்தை உறுதியாகவும், இளமையாகவும் பராமரிக்கிறது.
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் பிளாக்பெர்ரி உள்ளிட்ட பெர்ரி பழங்களில், அன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. குறிப்பாக ஆந்தோசயினின்கள் இதில் உள்ளன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்து போராட உதவுகின்றன. பெர்ரி பழங்களில் உள்ள அதிக வைட்டமின் சி, கொலஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது சருமத்தின் உறுதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை பராமரிக்க உதவுகிறது.
இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை நாள்தோறும் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் சருமம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]