உங்கள் சருமம் மிகவும் வறண்டு போயிருந்தால் அல்லது மாறிவரும் வானிலையால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை மாற்ற முயற்சிக்க வேண்டும். தோல் பராமரிப்பு வழக்கம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் அது சரியாக செய்யப்படாவிட்டால், உங்கள் சருமத்தை இன்னும் பாழாக்கிவிடும். சருமத்தில் ஏற்படும் தவறுகளுக்கு நம் வாழ்க்கை முறையும் காரணமாகும்.
இப்போது குளிர்காலத்தை நாம் எடுத்துக்கொள்வோம், குளிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டது என வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் பலரின் தோல் அப்போதும் மந்தமாகவும், வறண்டதாகவும், விசித்திரமாகவும் தெரியும். ஒருவகையில், ஹீட்டர், ட்ரையர் முன் அமர்வதும், சரியான தோல் பராமரிப்பு வழக்கத்தை செய்யாமல் இருப்பதும் சருமத்தை பாழாக்கும்.
அழகியல் மருத்துவரும், தோல் மருத்துவ நிபுணருமான டாக்டர் சாரு சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சருமத்தில் செய்யும் இதுபோன்ற சில தவறுகளைக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக நமது சருமம் மங்கத் தொடங்குகிறது என்றும் அவர் கூறுகிறார். இந்த தவறுகள் முகத்தின் தோலை மட்டுமல்ல, முழு உடலின் தோலையும் கெடுக்கும் என்கிறார். எனவே நாம் செய்யக்கூடாத தவறுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
குளிர்காலம் போன பின்பு, ஹீட்டர் முன் உட்கார வேண்டிய அவசியமிருக்காது, ஆனால் ஹேர் ட்ரையரைப் பயன்படுத்துவது அல்லது ஏசியில் அதிகமாக இருப்பது உங்கள் சருமத்தை வறட்சி அடைய செய்து, மந்தமாக்கும். எதையும் அதிகமாகச் செய்வது எப்போதும் கெடுதல், எனவே அதைச் செய்யக்கூடாது. இந்த பொருட்கள் நமது சருமத்தில் இருந்து தேவையான ஈரப்பதத்தை உறிஞ்சுவதால், உங்கள் சருமம் மோசமாகிவிடும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, இது எளிதில் சேதத்தை உண்டாக்கும்.
முகத்தை துடைப்பது அவசியம் என்பதை நாம் அறிவோம், ஆனால் அதிகமாக துடைத்தால் அது உங்களுக்கு நல்லதல்ல. இது சருமத்தின் பாதுகாப்பு அடுக்கை உடைத்து, உங்கள் தோலில் சொறிகள் மற்றும் வெடிப்புகளை ஏற்படுத்தும். சருமத்தை அதிகம் துடைப்பது சருமத்தின் இயற்கையான அமைப்பை பாழாக்கலாம். இதன் காரணமாக, உங்கள் சருமத்தில் உள்ள இயற்கை பிசுபிசுப்பு தன்மையும் குறையலாம். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை துடைத்தல் போதுமானது.
முகத்தை சுத்தம் செய்வது அவசியம் என்பதை நாம் அறிவோம், ஆனால் அதை அதிகமாகச் செய்தால், உங்கள் சருமம் மிகவும் சேதமடையக்கூடும். இதனால் சருமத்தின் ஈரப்பதம் குறைவதோடு, சருமம் வறண்டு, மந்தமாகவும் மாறும். முகத்தை அதிகமாகக் கழுவுவது நல்லதல்ல, அது சருமத்தைப் பாதுகாக்காமல் போய்விடும்.
சருமத்தை இரவில் சீரமைத்து, சரி செய்யவில்லை என்றால், அது உங்கள் சருமத்தை மேலும் மந்தமாகவும், வறண்டதாகவும் மாற்றிவிடும். நம் சோம்பேறித்தனத்தால் சருமத்தை சரி செய்யாமல் விட்டு விடுகிறோம். இதனால் நமக்கு அதிக பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். இரவில் ஒரு முறை உங்கள் சருமத்தை சுத்தம் செய்த பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். இது சருமத்தின் வறட்சியை ஒழிப்பதோடு, உங்கள் சருமத்திற்கு ஒரு விதமான புது பொலிவையும் தரும்.
இது போன்ற தவறுகளை நீங்களும் உங்கள் சருமத்தில் செய்கிறீர்களா? ஆம் எனில், அவற்றை இப்போதே கைவிடுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள். மேலும் இதுபோன்ற பதிவுகளைப் படிக்க Herzindagi உடன் இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]