நமது சருமத்தை பரமரிக்க கூடுதல் கவனம் செலுத்துகிறோம், இதற்காகப் பல்வேறு வகையான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இந்த தயாரிப்புகள் அனைத்தும் சில நாட்களுக்குப் பயனளிக்கின்றன, ஆனால் அவை பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. முகத்தில் உள்ள இறந்த சருமத்தை நீக்கும் ஸ்க்ரப்களை அடிக்கடி கடைகளிலிருந்து வாங்குகிறோம்.
ஆனால், சமையலறையில் இருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே சுலபமாக நம்மால் ஸ்க்ரப் செய்ய முடியும். இனி கடைகளில் ஸ்க்ரப் வாங்கி பணத்தை வீணாக்க வேண்டாம். இன்று இந்த பதிவில் ஓட்ஸ் மற்றும் தேன் பயன்படுத்தி ஸ்க்ரப் செய்யும் முறையைக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப் உங்கள் சருமத்துளைகளை சுத்தம் செய்து, இறந்த செல்களை நீக்கிப் புது பொலிவை தரும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேன் மற்றும் ஓட்ஸின் நன்மைகள்
தேன் மற்றும் ஓட்ஸ், இவை இரண்டுமே நம் சருமத்திற்கு நன்மை அளிக்கின்றன. ஓட்ஸ், நம் முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் அதிகப்படியான எண்ணெயை சுத்தம் செய்து புதிய பொலிவைத் தரும் அதே சமயம், தேன் நம் முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்குகிறது. இந்த இரண்டையும் ஒன்றாகப் பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை பயக்கும். இதன் செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறையைப் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க என்ன செய்வது?
தேவையான பொருட்கள்
- தேன் - 2 டீஸ்பூன்
- ஓட்ஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை
- ஓட்ஸை மிக்ஸியில் அரைத்து, அதில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும்.
- இப்போது இதை உங்கள் முகத்தில் தடவி, 5-6 நிமிடங்கள்வரை கைகளால் மென்மையாகத் தேய்க்கவும்.
- சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவவும்.
- இந்த செய்முறையை தினமும் செய்யக் கூடாது. வாரத்தில் 2 நாட்கள் பயன்படுத்தினால் போதுமானது.
- உங்கள் சருமம் உணர்திறன் வாய்ந்ததாக இருந்தால், பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation