இந்தியாவில் கோடை காலம் பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி ஜுன் வரை நீடிக்கும். சித்திரை வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் சமயத்தில் வெயில் பாடாய்ப்படுத்திவிடுவோம். ஆனால் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே வெப்பநிலை அதிகமாகவும், வறண்ட வானிலையும் நிலவுகிறது. இதனால் முகப்பரு, தோல் வெடிப்பு, உதடு வெடிப்பு போன்ற பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் தான் இந்நேரத்தில் சருமத்திற்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கவனிப்பு முக்கியம் என்கின்றனர் அழகுக் கலை நிபுணர்கள்.
இதோ வெயில் காலத்தில் உங்களது சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க சில கோடைக்கால டிப்ஸ்கள் குறித்த முழு விபரம் இங்கே..
![oil skin for beauty tips]()
மேலும் படிக்க: முகம் பளபளப்பாக மஞ்சள் பேஸ் மாஸ்க் பயன்படுத்தும் முறை!
கோடை வெயிலில் சரும பராமரிப்பு:
- கோடைக்காலத்தில் உங்களது சருமத்தை சுத்தமாகவும், வியர்வை இல்லாமல் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க தினமும் இரண்டு முறையாவது சுத்தமான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.
- உங்களது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க ஹைட்ரேட்டிங் மாஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்தவும்.
- சுட்டெரிக்கும் வெயிலிருந்து வரக்கூடிய UV- A மற்றும் UV- B போன்ற கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீனை உபயோகிக்கவும். நீங்கள் தினமும் வெளியில் செல்லும் போது பயன்படுத்தும் போது, முக சுருக்கங்கள், முகப்பருக்கள் போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது.
- வெயில் காலத்தில் சுப நிகழ்ச்சிகள் பங்கேற்ககூடிய சூழல் அமைந்தாலும் அதிக மேக் அப் போடுவதைத் தவிர்க்கவும். நீங்கள் அதிகமாக மேக் அப் போடும் போது அழகு சாதனப் பொருள்களில் உள்ள ரசாயனங்களால் முகத்தின் அழகு கெட்டுவிடும்.
- கோடைக் காலத்தில் ஏற்படும் முகப்பரு பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டும் என்றால், தினமும் கற்றாழை அல்லது வெள்ளரியைப் பயன்படுத்தி முகத்திற்கு பேசியல் செய்யவும். மேலும் இதை டோனர் போன்று பயன்படுத்தும் போது வெயில் காலங்களில் வியர்வை போன்றவற்றால் ஏற்படும் சரும துளைகள் அடைப்பை சரி செய்ய உதவுகிறது.
- நம்முடைய சருமத்தில் கண்கள் மிகவும் சென்சிடிவ் என்பதால் வெயில் காலத்தில் அதிக பாதிப்பை நமக்கு ஏற்படுத்தும். எனவே வெயிலில் செல்லும் போது சன்கிளாஸ்களை அணியலாம். ஒருவேளை உங்களது கண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவைப்பட்டால், கண்களுக்குக் கீழ் ஈரப்பதமூட்டும் கற்றாழை ஜெல் போன்றவற்றைப் பயன்படுத்தவும்.
- வெயில்காலத்தில் பெண்களுக்கு மட்மல்ல ஆண்களுக்கும் தோல் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், கோடை காலத்தில் லிப் பாம்களைப் பயன்படுத்தவும். ஒருவேளை லிம்பாக்களைப் பயன்படுத்த பிடிக்கவில்லை என்றால், எண்ணெயாவது உதடுகளைப் பராமரிக்க பயன்படுத்தவும்.
மேலும் படிக்க: கோடை வந்து விட்டது தினமும் எலுமிச்சை சாறு குடிக்க மறக்காதீர்கள்!
- கோடைக்காலத்தில் நீர்ச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றையும் உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற முறைகளை நீங்கள் வழக்கமாகப் பின்பற்றும் போது கோடைக்காலத்தில் எவ்வித சரும பிரச்சனையும் ஏற்படாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.