சருமப் பராமரிப்பைப் பொறுத்தவரை, லேசான மற்றும் பக்க விளைவுகள் இல்லாத பொருட்களையே பயன்படுத்த பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பினும், எளிதாக சந்தையில் கிடைப்பதால் சருமத்தின் தரத்தை பாதிக்கும் ரசாயனம் கலந்த பொருட்களையே நாம் தொடர்ந்து முகத்தில் பயன்படுத்துகிறோம், ஆனால் பலன் கிடைப்பதில்லை. இதனால் கரும்புள்ளிகள் மற்றும் நிறமி போன்ற சரும பிரச்சனைகளை எதிர்த்துப் போராட இயற்கையான ஒன்றைப் பயன்படுத்த விரும்பினால், ஆயுர்வேத மூலப்பொருளான முலேதி என்று சொல்லப்படும் அதிமதுரம் பயன்படுத்துங்கள்.
ஆங்கிலத்தில் லைகோரைஸ் ரூட் என்றும் அழைக்கப்படும் அதிமதுரம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் அதிகம் நிரம்பியுள்ளது. காலங்காலமாக, பல்வேறு தோல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விடுபட மக்கள் அதிமதுரம் பொடியைப் பயன்படுத்தி வருகின்றனர். அதிமதுரம் கொண்டு முகத்தை வெள்ளையாக மற்ற மிகவும் எளிமையான ஃபேஸ் பேக்குகளை பார்க்கலாம்.
மேலும் படிக்க: சிறந்த இயற்கை மாய்ஸ்சரைசர், எக்ஸ்ஃபோலியேட்டர் பயன்படுத்த விரும்பினால் தேனை உபயோகிக்கவும்
உணர்திறன் கொண்ட சருமத்திற்கு அதிமதுரம் பயன்படுத்தும் முறை
உணர்திறன் வாய்ந்த சருமம் முகத்தில் ஃபேஸ் பேக் பயன்படுத்தும் போது வீக்கம் அல்லது பாதகமான எதிர்விளைவுகளுக்கு ஆளாகிறது, எனவே இனிமையான ஒன்றைப் பயன்படுத்துவது மிக முக்கியம். அதிமதுரம் சருமப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவும் அதே வேளையில் சந்தனப் பொடி பயன்படுத்தினால் சருமத்தை ஆற்றும் தன்மை கொண்டது.
உணர்திறன் சருமத்திற்கு தேவையான பொருட்கள்
- 1 டேபிள்ஸ்பூன் அதிமதுரம் பொடி
- ½ டேபிள்ஸ்பூன் சந்தனப் பொடி
- 2 டேபிள்ஸ்பூன் பச்சை பால்
உணர்திறன் சருமத்திற்கு அதிமதுரம் பயன்படுத்தும் வழிகள்
- ஒரு கிண்ணத்தில் அதிமதுரம் பொடி மற்றும் சந்தனப் பொடியைச் சேர்க்கவும்.
- இவற்றை நன்றாகக் கலக்க பச்சைப் பால் சேர்க்கவும். ஒரு கரண்டியால் அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.
- அதன்பிறகு முகத்தை தண்ணீரில் கழுவி, உலர வைத்து. பின் அதிமதுர ஃபேஸ் பேக்கை தோலில் தடவவும். உங்கள் கழுத்துப் பகுதியை மறந்துவிடாதீர்கள்.
- இவற்றை 15-20 நிமிடங்கள் அப்படியே முகத்தில் விடவும், பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
- சிறந்த பலன்களுக்கு வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்துங்கள்.
எண்ணெய் பசை சருமத்திற்கு அதிமதுரம் பயன்படுத்தும் வழிகள்
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு முகத்தில் பருக்கள் மற்றும் வழுவழுப்பு காரணமாக ஏற்படும் புள்ளிகளை நீக்கக்கூடிய ஒன்று தேவை. அதிமதுரம், எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு தோல் பொடிகள் அடைபட்ட துளைகள் மற்றும் அதிகப்படியான எண்ணெயை எதிர்த்துப் போராட உதவுகிறது, அதேசமயம் அதிமதுரம் அடைபட்ட துளைகளை பிரகாசமாக்கி, அழகான பளபளப்பைக் கொடுக்கும்.
எண்ணெய் பசை சருமத்திற்கு தேவையான பொருட்கள்
- 1 டேபிள்ஸ்பூன் அதிமதுர பவுடர்
- 1 ஆரஞ்சு தோல்
- 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு
எண்ணெய் பசை சருமத்தினர் அதிமதுரம் பயன்படுத்தும் வழிகள்
- புதிய ஆரஞ்சு தோலை உரித்து, கழுவி மிக்சர் கிரைண்டரில் அரைக்கவும்.
- பின்னர் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் அதிமதுர பவுடரை சேர்க்கவும்.
- மேலும், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல் கலவையைச் சேர்க்க வேண்டும்.
- உங்கள் முகத்தை சாதாரண நீரில் கழுவி, ஃபேஸ் மாஸ்க்கைப் பூசி, 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- அது பாதி ஈரமாக இருக்கும்போது, கைகளை கொண்டு முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யத் தொடங்குங்கள்.
- இன்னும் 10 நிமிடங்கள் விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.
- கடைசியாக, சருமத்தில் ரோஸ் வாட்டரைத் தெளிக்கவும்.
- இந்த செய்முறையை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தவும்.
எண்ணெய் பசை மற்றும் வறண்ட கலவை கொண்ட சருமத்திற்கு அதிமதுர ஃபேஸ் பேக்
மிகவும் சிக்கலான தோல் வகைகளில் ஒன்று கூட்டு சருமம், இதில் உங்கள் முகத்தின் சில பகுதிகள் எண்ணெய் பசையாக இருக்கும், அதாவது T-மண்டலம் (மூக்கு, நெற்றி மற்றும் கன்னம்), மற்றவை இயல்பானவை அல்லது வறண்டவை. உங்கள் முகத்தில் தடவ வேண்டிய கூறுகளைத் தேர்ந்தெடுப்பது கடிணமாக இருக்கலாம். ஆனால், எண்ணெய் மற்றும் வறண்ட பகுதிகளுக்கு வேலை செய்யும் இந்த அதிமதுர ஃபேஸ் பேக் உதவும்.
கூட்டு சருமத்திற்கான ஃபேஸ் பேக்குக்கு தேவையான பொருட்கள்
- 1 டேபிள்ஸ்பூன் அதிமதுர பவுடர்
- 1 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல்
- 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர்
கூட்டு சருமத்திற்கு அதிமதுரம் பயன்படுத்தும் வழிகள்
- ஒரு கிண்ணத்தில் கற்றாழை ஜெல், அதிமதுர பவுடரைச் சேர்க்கவும்.
- பின்னர் ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்த்து கலக்கவும்.
- மைல்டு ஃபேஸ் வாஷ் அல்லது கடலை மாவு கொண்டு உங்கள் முகத்தைக் கழுவுவ வேண்டும்.
- அதன்பிறகு ஃபேஸ் பேக்கின் மெல்லிய அடுக்கைப் முகத்தில் பூசி, 20-25 நிமிடங்கள் அப்படியே விடவும்.
- அதன்பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவி சிறந்த பலன்களை பெறவும்.
சாதாரண சருமத்தை வெள்ளையாக மாற்ற அதிமதுர ஃபேஸ் பேக்
எல்லோரும் சாதாரண சரும வகையைப் பெற விரும்புகிறார்கள், ஏனெனில் இது நன்கு சமநிலையான சருமமாகக் கருதப்படுகிறது. இருப்பினும் சாதாரண சரும வகைகளைக் கொண்டவர்கள் எந்த பிரச்சனைகளையும் சந்திப்பதில்லை என்று அர்த்தமல்ல. அவர்களுக்கு கரும்புள்ளிகள், பருக்கள் வரலாம் மற்றும் முகம் கருமையாக இருக்கலாம். இவை அனைத்தையும் எதிர்த்துப் போராட இந்த ஃபேஸ் பேக்கை முயற்சிக்கவும்.
அதிமதுர ஃபேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- 2 டேபிள்ஸ்பூன் அதிமதுர பவுடர்
- 1 ½ டேபிள்ஸ்பூன் தேன்
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
மேலும் படிக்க: எண்ணெய் பசை சருமத்தினர் வெயில் காலத்தில் இந்த வீட்டு மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள், முகம் தெளிவாக இருக்கும்
சாதாரண சருமத்தினருக்கான அதிமதுர ஃபேஸ் பேக்
- ஒரு கிண்ணத்தில் அதிமதுர பவுடர் மற்றும் தேன் சேர்த்து கலக்கி தடிமனான பேஸ்ட்டை உருவாக்கவும்.
- பின்னர் இதில் எலுமிச்சை சாறை சேர்த்து நன்றாக கலக்கவும்..
- நிலைத்தன்மை மிகவும் தடிமனாக இருந்தால், அதில் 1 டேபிள்ஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்க்கவும்.
- உங்கள் முகத்தை சாதாரண நீரில் கழுவி.
- இந்த முகமூடியை முகம் மற்றும் கழுத்தில் தடவவும்.
- 25 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
- கடைசியாக, ரோஸ் வாட்டரை முகத்தில் தெளிக்கவும்.
- இதை வாரத்திற்கு இரண்டு முறை தடவவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation