பெண்களின் முக அழகிற்கு ஆதாரம் - ஆவாரம் பூ "தங்கம் போல் முகம் மின்ன" 4 ஆவாரம் பூ பேஷ் பேக்

உங்கள் முகம் எத்தனை அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி வந்தாலும் மந்தமாகவே இருக்கிறதா? தங்கச்சத்து அதிகம் உள்ள ஆவாரம் பூவை இந்த 4  வழிகளில் முகத்திற்கு பயன்படுத்துங்கள். ஒரே வாரத்தில் உங்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.
image

உங்கள் முகம் அழகாக பளபளப்பாக இருக்க வேண்டுமா? முகம் வறட்சியாக இருப்பதற்கு முக்கிய காரணம் உடலில் நீர்ச்சத்து இல்லாமல் போவதுதான். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். முகத்தில் கரும்புள்ளிகள், கருப்பு தழும்புகள், பழுப்பு நிறத்தில் முகம் மாறுவது, எண்ணெய் பசை சருமம் என அனைத்திற்கும் காரணம் உடலில் நீர்ச்சத்து இல்லாமை தான். இதை ஒரே ஒரு செய்முறையில் சரி செய்ய முடியும் என்றால் அது ஆவாரம் பூவால் தான் முடியும். பொதுவாக ஆவாரம் பூவில் தங்கச்சத்து இருப்பதாக கிராமப்புறங்களில் சொல்லுவார்கள். ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ என்று பழமொழி சொல்லும் இதில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோய், உடல் சார்ந்த நோய்களை சரி செய்யும் வல்லமை கொண்டது ஆவாரம்பூ அதே போல் இந்த ஆவாரம் பூவை முகத்திற்கு பயன்படுத்தினால் உங்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.

பெண்களின் முக அழகிற்கு ஆதாரம் - ஆவாரம் பூ

amazing-benefits-of-Aavaram-flower-aavaram-poo-for-30-year-old-women-and-diabetics-patients-1736276609250

முகத்தை பொன் போல ஜொலிக்க வைக்கும் வல்லமை கொண்டது ஆவாரம் பூ. அனைத்து வயதினரும் இந்த ஆவாரம் பூ பேஸ் பேக்கை தாராளமாக முகத்திற்கு அப்ளை செய்யலாம். உடல் முழுவதும் பளபளப்பாக இருக்க ஆவாரம்பூ பேஸ்ட்டை தடவி குளிக்கலாம். குறிப்பாக தோளில் வரும் கெட்ட வியர்வைகள் வெளியேறி உடல் முழுவதும் உள்ள பருக்கள் கருப்பு தழும்புகள் துர்நாற்றம் வீசும் சீல் கொண்ட பருக்கள், அனைத்தையும் ஒரு வாரத்தில் சரி செய்யும் வல்லமை கொண்டது இந்த ஆவாரம் பூ.

முகம் மின்ன ஆவாரம் பூ பேஷ் பேக்

தேவையான பொருட்கள்

  • ஆவாரம் பூ பவுடர்
  • சுத்தமான சந்தனத்தூள்
  • தேன்

செய்முறை

  1. ஆவாரம் பூவை பறித்து நிழலில் காயவைத்து உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் உலர்த்தி காய வைக்கப்பட்ட ஆவாரம்பூவை மிக்சியில் போட்டு அரைத்து பொடியாக வைத்துக் கொள்ளவும்.
  3. சுத்தமான சந்தனத்தை கரைத்து எடுத்துக் கொள்ளவும் அல்லது கடைகளில் சந்தன பொடிகளை வாங்கிக் கொள்ளவும்.
  4. சுத்தமான தேன் எடுத்துக் கொள்ளவும்.
  5. ஆவாரம் பூ பொடி மூன்று டீஸ்பூன் இரண்டு டீஸ்பூன் சந்தனம் ஒரு டீஸ்பூன் தேன் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்ந்து கலந்து டேஸ்டாக உருவாக்கவும்.
  6. தயாரிப்பது உங்கள் முகம் முழுவதும் சற்று அதிகமாக தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்.
  7. பின்னர் அரை மணி நேரம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.
  8. இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் மூன்று நாட்கள் போடுங்கள் உங்கள் முகம் 10 நாட்களில் பளபளப்பாக ஜொலிக்கும்.

ஆவாரம் பூ - வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் பேஷ் பேக்

Vitamin-e-capsule

தேவையான பொருட்கள்

  • ஆவாரம் பூ பவுடர் 2 டீஸ்பூன்
  • வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்று
  • இரண்டு டீஸ்பூன் தயிர்


செய்முறை

  1. ஆவாரம் பூ பவுடரை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.
  2. அதோடு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் உடைத்து ஆவாரம் பூவில் கலந்து விடவும்.
  3. பின்னர் இரண்டு டீஸ்பூன் தயிரை அந்த கலவையில் சேர்ந்து நன்றாக கலக்கவும்.
  4. தயாரான பேஸ்ட்டை அப்படியே உங்கள் முகத்தில் அப்ளை செய்யவும்.
  5. ஒரு அரை மணி நேரம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஆவாரம் பூ - பாசிபயறு குளியல்

1601959700-0255

தேவையான பொருட்கள்

  • ஆவாரம் பூ பவுடர் 2 டீஸ்பூன்
  • பாசிப்பயறு பவுடர் 2 டீஸ்பூன்

செய்முறை

  1. ஆவாரம் பூ பவுடரை எடுத்துக் கொள்ளவும்.
  2. பாசிப்பயறு பவுடரை சமமாக எடுத்து கொள்ளவும்.
  3. ஆவாரம் பூ பவுடர் மற்றும் பாசிப்பயறு பவுடரை சமமாக கலந்து பேஸ்ட் ஆக தயார் செய்யவும்.
  4. குளிக்கும்போது இந்த பேஸ்ட்டை உடல் முழுவதும் தடவி குளித்தால் உங்கள் உடல் முழுவதும் தோல் சார்ந்த பிரச்சனைகள் இல்லாமல் இருக்கலாம்.
  5. இந்த கலவையை உங்கள் முகத்திற்கு பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.

ஆவாரம் பூ தேன் பேஷ் பேக்

3d-cartoon-honey-drips-splashes_23-2151705786 (1)

தேவையான பொருட்கள்

  • ஆவாரம் பூ
  • ரோஜா இதழ்கள்
  • எலுமிச்சை தோல்
  • கஸ்தூரி மஞ்சள்
  • பாசிப்பயறு
  • தேன்

செய்முறை

  1. உலர்த்தி காய வைக்கப்பட்டு பவுடராக உள்ள ஆவாரம் பூவை இரண்டு டீஸ்பூன் எடுத்து கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.
  2. அதோடு ரோஜா இதழ்களை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
  3. அதன் பின் எலுமிச்சை தோலை நன்றாக வெயிலில் காய வைத்து சேர்த்துக் கொள்ளவும்.
  4. அதோடு கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
  5. இரண்டு டீஸ்பூன் பாசிப்பயறு கலந்து கொள்ளவும்.
  6. எடுத்து வைத்த அனைத்து பொருளையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
  7. பின்னர் அரைத்து எடுத்த பவுடரில் சிறிதளவு தேன் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல கலக்கவும்.
  8. தயாரான பேஸ்ட்டை உங்கள் முகம் முழுவதும் பரவலாக தடவி மசாஜ் செய்யவும்.
  9. அரை மணி நேரம் நன்றாக முகத்தில் காய வைத்துவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை மெதுவாக கழுவவும்.

இப்படி செய்தால் உங்கள் முகம் ஒரே வாரத்தில் மின்னும், முகத்தில் உள்ள கருப்பு தழும்புகள் அழுக்குகள் எண்ணெய் பசை அனைத்தும் சரியாகி பளபளப்பாக ஜொலிக்கும் அளவிற்கு உங்கள் முகம் தயாராகிவிடும்.

இந்த பேஸ் பேக்குகளை வாரத்திற்கு இரண்டு மூன்று முறை நீங்கள் பயன்படுத்தலாம். அதேபோல் குளிப்பதற்கு தயார் செய்த பவுடரை எடுத்து ஒவ்வொரு நாளும் குளிக்கும் போது உடல் முழுவதும் தடவி சோப்பு போல பயன்படுத்தி குளிக்கலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP