தற்போதைய நவீன காலத்தில் பெரும்பாலான இளம் பெண்கள் நரைமுடி தொல்லையால் பாதித்துள்ளனர். அதிலும் 25 வயதை தொட்ட இளம் பெண்களுக்கு கூட கூந்தலில் நரைமுடி அதிகம் வரும் சூழல் உள்ளது. இதற்கு தவறான உணவு முறை பழக்கவழக்கம் மற்றும் கூந்தலை சரிவர கவனித்துக் கொள்ளாமல் இருப்பது தான் காரணமாக உள்ளது. சரியான நேரத்தில் சரிவிகித உணவை சாப்பிட்டு உச்சந்தலையை ஆரோக்கியமாக பராமரித்து வந்தாலே இது போன்ற நரைமுடி, முடி உதிர்வு, பொடுகு, பேன், தொல்லை ஒருபோதும் வராது.
மேலும் படிக்க:முடி உதிர்வை தடுத்து நிறுத்தி, 30 நாளில் வழுக்கை திட்டுகளில் முடி வளரச் செய்யும் வெங்காயச்சாறு, வெந்தய பேஸ்ட்
அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தி கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை சரி செய்யலாம் என பெரும்பாலான இளம் பெண்கள் நினைத்து வருகிறார்கள். இதற்காக ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை வாங்கியும் பயன்படுத்தி வருகிறார்கள் இருந்த போதிலும், அதில் சரியான பலன்கள் கிடைப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இளம்பெண்களுக்கு நரைமுடி தொல்லை

தற்போதைய நவீன காலத்து இளம்பெண்கள் நரை முடி தொல்லையால் பெருதளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏனென்றால் இந்த நரைமுடியை பெண்களால் மறைக்க முடிவதில்லை. மாற்றாக ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் ஹேர் டை பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள் இதனால் தலைமுடி எளிதில் உடைந்து உதிரும் சூழல் ஏற்படுகிறது.
இந்த பிரச்சனைகளை சரி செய்ய இயற்கையான சில வழிமுறைகளை நாம் கையாள வேண்டும். குறிப்பாக, தலைமுடிக்கு எக்கச்சக்கமான நன்மைகளை கொட்டிக் கொடுக்கும் நெல்லிக்காய் கருவேப்பிலை புதினா உள்ளிட்ட இயற்கையான பொருட்களை வைத்து வீட்டிலேயே நீங்கள் தயாரிக்கும் இந்த ஆரோக்கியமான உங்கள் தலைமுடியில் வரும் வெள்ளை நரை முடிகளை கருப்பாக மாற்றும் வல்லமை கொண்டது.
ஏனென்றால் இந்த ஆரோக்கியமான நெல்லிக்காய் ஜூஸை வீட்டிலேயே நீங்கள் தயார் செய்து ஒரு 45 நாட்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்தால் போதும். உங்கள் வெள்ளை முடி 45 நாட்கள் முடிவதற்குள் அடர் கருப்பு நிறத்தில் மாறும்.
நரைமுடியை கருப்பாக்கும் ஜூஸ் செய்முறை
தேவையான பொருட்கள்
- எலுமிச்சை பழம் - பாதி
- நெல்லிக்காய் - 2 பெரியது
- மஞ்சள் - ஒரு சிட்டிகை
- புதினா இலை - 5 அல்லது 7 இலைகள்
- கருவேப்பிலை - சிறிதளவு
நரைமுடியை கருப்பாக்கும் ஜூஸ் செய்முறை
- இரண்டு பெரிய நெல்லிக்காயில் கொட்டையை நீக்கி சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில், வெட்டிய நெல்லிக்காய் துண்டுகள், அதனுடன் கருவேப்பிலை இலைகள், மற்றும் புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்க்கவும்.
- அப்படியே மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதில் அரை எலுமிச்சம் பழத்தை அப்படியே பிழிந்து விடவும்.
- மீண்டும் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துவிட்டு தனி பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
- இந்த ஜூசை அப்படியே குடிக்கலாம், குறிப்பாக தினமும் காலை வெறும் வயிற்றில் இதை குடிக்க வேண்டும்.
- தேவைப்பட்டால் இந்த ஜூசை வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து குடிக்கலாம்.
நெல்லிக்காயின் பண்புகள்
- நெல்லிக்காயில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், பாலிபினால்கள் மற்றும் பல்வேறு தாதுக்கள் உள்ளன, அவை ஆரோக்கியத்தின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானவை. இந்த பழங்கள் வைட்டமின் சி இன் சக்தி மையமாகும், இது வயதான செயல்முறைக்கு காரணமான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- நெல்லிக்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை முடி செல்களை சேதப்படுத்தும் மற்றும் வயதான செயல்முறையை துரிதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன. இந்த செயல்முறையின் மூலம், நெல்லிக்காய்கள் முடியின் இயற்கையான நிறத்தை நீண்ட நேரம் பராமரிக்க உதவுகின்றன.
- மெலனின் உற்பத்திக்கும் நெல்லிக்காய் உதவுகிறது. கிளீவ்லேண்ட் கிளினிக்கின் கூற்றுப்படி, மெலனின் என்பது உங்கள் உடலில் முடி, கண்கள் மற்றும் தோல் நிறமிகளை உருவாக்கும் ஒரு பொருளாகும். உங்கள் உடல் எவ்வளவு மெலனின் உற்பத்தி செய்கிறதோ, அவ்வளவு கருமையாக உங்கள் கண்கள், முடி மற்றும் தோல் இருக்கும். மெலனின் முடியின் இயற்கையான நிறத்தையும் பராமரிக்கிறது.
- மெலனின் குறைவதற்கு மரபியல், வயது, மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக இருக்கலாம்.
மேலும் படிக்க:கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? உடனே நிறுத்த இந்த எண்ணெயை 30 நாள் யூஸ் பண்ணுங்க
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation