முகத்தில் வேக்சிங் செய்யாமல் சுலபமான முடிகளை அகற்ற எளிய வழிகள்

முக முடி பிரச்சனைகளுக்கு தீர்வுகாண வேக்சிங் செய்ய விருப்பமில்லை என்றால் வேறு சில வழிகள் உள்ளன, இந்த 4 வழிகள் உங்களுக்கு சுலபமாகவும், மீண்டும் செய்ய தூண்டுவதாகவும் இருக்கும்.
image

வேக்சிங் என்பது பலருக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கு ஒரு வழியாகும். ஆனால் இது வலியை கொடுக்கக்கூடியது, நேரத்தை அதிகமாக எடுத்துக்கொள்வது மற்றும் அனைத்து தோல் வகைகளுக்கும் ஏற்றதாக இருக்காது. முடி இல்லாத சருமத்தை அடைவதற்கு வேக்சிங் செய்வதைத் தாண்டி, முகத்தில் உள்ள முடிகளை அகற்றுவதற்கான சில பயனுள்ள மற்றும் பாதுகாப்பான வழிகள் உள்ளன. அவற்றில் சில வகைகளைப் பார்க்கலாம்.

முக முடியை அகற்ற மாற்று முறைகள்

  • முகம் மற்றும் உடல் முடிகளை அகற்றுவதற்கு வேக்சிங் ஒரு பிரபலமான முறையாக இருந்தாலும், சிலருக்கு அது வலியை ஏற்படுத்தும். உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு சிவத்தல், எரிச்சல் மற்றும் பிற தோல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால் மாற்று வழிகள் இருக்கின்றது.
  • திரிடிங் ஒரு சிறந்த மாற்றாகும், குறிப்பாகப் புருவங்கள் மற்றும் மேல் உதடுகளில் இருக்கும் முடிகளை அகற்ற சிறந்த வழியாக இருக்கும். இதனால் சிறு வலிகளை அனுபவித்தாலும் சரும சார்ந்த பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

thread face wax method

Image Credit: Freepik


  • வீட்டில் தீர்வுகளை விரும்புவோருக்கு எபிலேட்டர் பயன்படுத்தலாம். வலிகள் இல்லாத சிறந்த தீர்வாக இந்த எபிலேட்டர் உங்களுக்கு உதவும்.
  • லேசர் மூலம் முடி அகற்றுதல் நடைமுறைகள் பலருக்கு விருப்பமான தேர்வாகிவிட்டன. அனைத்து தோல் டோன்கள் மற்றும் முடி வகைகளுக்கு ஏற்றது. இந்த லேசர் ஒளியின் மூன்று வெவ்வேறு அலைநீளங்களை ஒன்றிணைத்து முடியை திறமையாகக் குறிவைக்கிறது. அதன் குளிரூட்டும் முறை செயல்முறையைக் கிட்டத்தட்ட வலியற்ற தாக்குகிறது.

மேலும் படிக்க: இரவு படுக்கைக்கு முன் இந்த 4 முக்கிய காரணங்களுக்காக முகத்தை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்


  • நிரந்தர முடிவுகளை அகற்ற நினைப்பவர்களுக்கு மின்னாற்பகுப்பைத் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு மயிர்க்கால்களிலும் நுண்ணிய ஊசியைச் செலுத்துவதும், அதைத் தொடர்ந்து மின்னோட்டம் மூலம் அழிக்கச் செய்கிறது.
  • இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்றதாக இல்லை என்றால் விரைவான, வலியற்ற மற்றும் மலிவான நீக்குதலுக்கு கிரீம்கள் சிறந்தவை மற்றும் இவை ஏராளமாக உள்ளன.

laser face wax method

Image Credit: Freepik


  • இருப்பினும், அவை அதிக உணர்திறன் கொண்ட சருமத்திற்கு பொருந்தாது, எனவே பேட்ச் சோதனை அவசியம். மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு இந்த நடைமுறைகளை பின்பற்றலாம்.

மேலும் படிக்க: அணிந்தால் ராணியின் தோற்றத்தைத் தரக்கூடிய லேட்டஸ்ட் குந்தன் நகை டிசைன்கள்


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP