மளமளவென அடர்த்தியுடன் வேகமாக முடி வளர வீட்டிலேயே உருவாக்கலாம் ஹேர் டானிக்

அடர்த்து குறையாமல் முடி வேகமாகவும், வலுவாகவும் கூந்தல் வளர வீட்டிலேயே சூப்பராக உருவாக்கலாம் உருளைக்கிழங்கு ஹேர் டானிக். இந்த டானிக் உங்களுக்கு கண்டிப்பாக பலன் தரும். 
image

தலைமுடி சேதங்கள் இல்லாமல் ஒரு நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கும் பெண்கள் அதிகம். முடி உதிர்தல், வெள்ளை முடி, வறண்ட கூந்தல், அதிக எண்ணெய், இவை அனைத்தும் ஒவ்வொரு பெண்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகள். நம் தலைமுடி செழிப்பாக இருந்தாலும், அதை அப்படியே பராமரிக்க வேண்டியது அவசியம். இங்கே, குறிப்பாக உங்களுக்கு முடி வளர்ச்சியில் பிரச்சனைகள் இருந்தால் இந்த சில டானிக்குகள் அல்லது ஜூஸ்கள் முடி பிரச்சனைக்குத் தீர்வாக இருக்கும்.

உருளைக்கிழங்கு சாறு

பழங்கள் மற்றும் காய்கறிகளின் சாறு ஒட்டுமொத்த மனித உடலுக்கும் நல்லது. உருளைக்கிழங்கின் சாற்றில் வைட்டமின் சி, துத்தநாகம், பீட்டா கரோட்டின், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால் உச்சந்தலையில் உள்ள செல்களுக்கு ஊட்டமளித்து முடியை ஆரோக்கியமாக வைக்கிறது. உருளைக்கிழங்கு pH அளவை சீராக வைத்து பொடுகு வராமல் தடுக்கிறது. முடி உதிர்தலையும் நிறுத்துகிறது.

potato juice inside

Image Credit: Freepik


செய்முறை

  • தோலுரித்த உருளைக்கிழங்கைச் சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பிளெண்டரில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கி ஜூஸ் தயாரிக்கவும்.
  • ஒரு கிளாஸில் உருளைக்கிழங்கை வடிகட்டி உடனடியாக குடிக்கவும். அதிக நேரம் இந்த ஜூஸை வெளியில் வைத்திருக்க வேண்டாம்.

நெல்லிக்காய் சாறு

நெல்லிக்காய் சாறு தலைமுடிக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இது உச்சந்தலை மற்றும் முடிக்கு சிறந்தது. நெல்லிக்காய் சாறு வைட்டமின் சி நிறைந்தது மற்றும் இயற்கையான ஆக்ஸிஜனேற்றியாகவும் அறியப்படுகிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் முடி உதிர்வை மிக வேகமாக தடுக்கிறது. இது மட்டுமின்றி, முன்கூட்டியே நரையைத் தடுக்க செய்கிறது. ஈஸ்ட் தொற்று மற்றும் பொடுகுத் தொல்லையைத் தடுக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால், சாற்றை தினமும் குடித்து வரலாம்.

செய்முறை

  • நெல்லிக்காயை சிறு துண்டுகளாக நறுக்க பிளெண்டரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பின்னர் அதை ஒரு கிளாஸில் வடிகட்டி அசிடிட்டியை குறைக்க சிறிது தேன் சேர்த்து குடிக்கவும்.

கேரட் சாறு

கேரட் சாறு முடி வளர்ச்சிக்கு முக்கியமான பல ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. கேரட்டின் சாற்றில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால். இதில் இருக்கும் கரோட்டினாய்டுகள் தலையின் உயிரணுக்களின் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்கின்றன. கேரட் சாற்றில் வைட்டமின்கள் உள்ளதால் உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை குணப்படுத்துவதன் மூலம் முடி உதிர்வை தடுக்கிறது.

carrot juiceImage Credit: Freepik


செய்முறை

  • கேரட்டை கழுவி எடுத்துக்கொண்டு துண்டுகளாக வெட்டி ஜாடியில் கலந்து அதில் சிறிது தண்ணீர் ஊற்றி ஜூஸ் தயாரிக்கவும்.
  • இப்போது சாற்றை வடிகட்டி குடிக்கவும்.

மேலும் படிக்க: உப்பு தண்ணீரில் முகம் கழுவுவதால் தெளிவாகவும், பொலிவாகவும் சருமம் பிரகாசிக்கும்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP