முந்திரி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா
Raja Balaji
15-07-2025, 10:39 IST
gbsfwqac.top
முந்திரி பருப்பு மட்டுமல்ல அதன் பழங்களும் சுவை நிறைந்தவை. முந்திரி பழத்தில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை புரதம் மற்றும் தாதுக்களின் மிகச்சிறந்த ஆதாரமாகும்.
எடையைக் குறைக்க முந்திரி பழம்
முந்திரி பழம் இரத்த உற்பத்திக்கும், இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் மற்றும் உடல் எடையை குறைப்பதற்கும் உதவுகிறது.
புற்றுநோய் தடுப்பு
முந்திரி பழங்களில் காணப்படும் ப்ரோ அந்தோசயனின் எனும் சேர்மம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்லது
முந்திரி பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதன் மூலம் நோய்த் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன.
முந்திரி பழத்தில் நல்ல கொழுப்பு
முந்திரி பழங்களில் கொழுப்புகள் அதிகமாக இருந்தாலும் அவை ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கண்களுக்கு நல்லது
சூரிய கதிர்களின் தாக்கத்திலிருந்து கண்களை பாதுகாக்கவும், கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கண் சார்ந்த நோய்களின் அபாயத்தை குறைக்கவும் முந்திரி பழம் சாப்பிடுங்கள்.