herzindagi
image

War 2 OTT release: வார் 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு; எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

War 2 OTT release: ஹிருத்திக் ரோஷன் - ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் கூட்டணியில் உருவான வார் 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. திரையரங்கில் இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், ஓடிடியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Editorial
Updated:- 2025-10-09, 11:43 IST

War 2 OTT release: பாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வார் 2 திரைப்படம், தற்போது ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இணைந்து நடித்த முதல் திரைப்படம் என்பதால் இப்படம் திரையரங்கில் வெளியான போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

மேலும் படிக்க: Mirai ott release: ரசிகர்களின் வரவேற்பை பெற்ற மிராய் திரைப்படம்; ஓடிடி வெளியீடு எப்போது தெரியுமா?

 

வார் 2 திரைப்படம்:

 

அயன் முகர்ஜி இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன், ஜூனியர். என்.டி.ஆர், கியாரா அத்வானி ஆகியோர் நடிப்பில் உருவான வார் 2 திரைப்படம், கடந்த ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. குறிப்பாக, ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான கூலி திரைப்படத்துடன் இப்படம் வெளியானது.

Hrithik Roshan

 

இதனால், இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தரப்பில் இருந்து உருவாக்கப்பட்ட ஸ்பை யுனிவர்ஸ் திரைப்படங்களின் ஆறாவது வெளியீடாக வார் 2 திரைப்படம் அமைந்தது. முன்னதாக, வார் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2019-ஆம் ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

மேலும் படிக்க: Housemates ott release: ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம்; எந்த ஓடிடி தளத்தில் எப்போது பார்க்கலாம்?

 

கலவையான விமர்சனங்களை பெற்ற வார் 2 திரைப்படம்:

 

இதன் தொடர்ச்சியாக வெளியான வார் 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. குறிப்பாக, அழுத்தமான கதைக்களம் இன்றி இப்படம் இருந்ததாக விமர்சகர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக வசூல் ரீதியாகவும் வார் 2 திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், ஓடிடியில் இப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி பார்வையாளர்கள் இடையே நிலவியது.

Jr NTR

வார் 2 ஓடிடி ரிலீஸ்:

 

இந்நிலையில், வார் 2 திரைப்படம் இன்று (அக்டோபர் 9) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. திரையரங்கில் வெளியான போது பார்வையாளர்களின் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், ஓடிடி வெளியீட்டில் வார் 2 திரைப்படம் கவனம் ஈர்க்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வார் 2 திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]