சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். நடிகர் மாரிமுத்து சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
ஆதி குணசேகரன் கதாபாத்திரம் ஒரு ட்ரெண்டிங் கதாபாத்திரம் என்பதால் இந்த கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க பேச்சுவார்த்த நடத்தினார்கள். முதலில் வேல ராமமூர்த்தியை தான் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை வேல ராமமூர்த்தி மறுத்துள்ளனர். பின்பு பேச்சுவார்த்தை நடத்திய பின்பு ஒப்புக்கொண்டாராம். இந்த கதாபாத்திரம் நடிகர் பசுபதியையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகிவுள்ளது. மாரிமுத்துவிற்கு கிடைத்த வரவேற்பு வேல ராமமூர்த்தி கிடைக்குமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்க தெரியுமா ? முழு விவரம் இதோ..
மேலும் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க, மாரிமுத்து ஒரு நாளைக்கு ரூ.20,000 சம்பளமாக வாங்கி வந்துள்ளார். தற்போது அதே கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க, ஒரு நாளைக்கு ரூ.40,000 சம்பளமாக வாங்குகிறார் என கூறப்படுகிறது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]