சின்னத்திரையில் ஆங்கராக தனது பயணத்தை தொடங்கி பின்பு நடிகையாக மாறியவர் நடிகை பவித்ரா ஜனனி. சன் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி சீசன் 3ல் ரியோவின் தங்கை ரோலில் நடித்து இருந்தார் பவித்ரா. கால் இழந்த பெண்ணாக பவித்ராவின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளியது. சிறிய இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஈரமான ரோஜாவே தொடரில் லீட் ரோலில் மலர் கதாபாத்திரத்தில் களம் இறங்கினார் பவித்ரா.
இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. திரவியம் - பவித்ரா ஜோடியை ரசிகர்கள் கொண்டாடினர். முன்னணி சின்னத்திரை நடிகையாகவும் பவித்ரா ஜனனி மாறினார். அந்த சீரியலுக்கு பின்பு தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் ஹீரோயினாக களம் இறங்கினார். அபிநயா ரோலில் பவித்ராவின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளியது. தற்போது சீரியலில் கலெக்டர் ரோலில் நடித்து வருகிறார் பவித்ரா. நடிப்பை தாண்டி பவித்ராவுக்கு மிகவும் பிடித்தது பயணம். இயற்கை விரும்பியான இவர், அடிக்கடி பயணம் மேற்கொள்வார். கொல்லிமலை, கிரிவலம், சதுரகிரி, வெள்ளையங்கிரி, தேக்கடி, ஊட்டி, கொடைக்கானல் என பல இடங்களுக்கு ட்ரிப் செய்ய கிளம்பி விடுவார். அங்கு எடுக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது பவித்ரா, மூணார், தேனி பக்கம் சுற்றுலா சென்று இருக்கிறார். அவருடன் சின்னத்திரை நடிகைகள் தர்ஷிகா, ஆர்த்தி சுபாஷ் ஆகியோரும் சென்று இருக்கின்றனர். நீர்வீழ்ச்சியில் குளியல், ஆட்டம், மலைப்பயணம் என தனது விடுமுறை தினங்களை செம்ம ஹேப்பியாக கழித்தி இருக்கிறார் பவித்ரா. இந்த புகைப்படங்களுக்கு இன்ஸ்டாவில் லைக்ஸ் குவிந்து வருகிறது.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation