சின்னத்திரையின் அடையாளமாக விளங்குகிறது சன் டிவி. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சின்னத்திரையில் தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறது. இதில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் டி.ஆர்.பியில் ரேட்டிங்கில் கலக்கி வருகின்றன. சித்தி, கோலங்கள்,அலைகள் போன்ற தொடர்களுக்கு பிறகு மக்களின் பேராதரவுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர். தொடர்ந்து டி.ஆர்.பியில் முதலிடத்தை பிடித்து வருகிறது இந்த சீரியல். எதிர்நீச்சல் தொடருக்கு தூண் போல் இருந்தவர் மாரிமுத்து. அவரின் மறைவுக்கு பிறகு சீரியல் டி.ஆர்.பி அடி வாங்கும் என பலரும் நினைத்தனர்.
ஆனால் இயக்குனரின் திடீர் திருப்பதால் சீரியல் தொடர்ந்து வெற்றி முகத்தில் பயணித்து கொண்டிருக்கிறது. மாரிமுத்துவுக்கு பின்பு நடிகர் வேலராமூத்தி குணசேகரனாக களம் இறங்கவுள்ளார். அவரின் அறிமுகத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் எதிர்நீச்சல் சீரியல் குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்நீச்சல் சீரியல் நேரம் மாற்றப்படுகிறது.
இதுவரை ப்ரைம் டைமில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் இனிமேல் இரவும் 9 மணிக்கு ஒளிப்பரப்பாகும் என தெரிகிறது. இந்த திடீர் நேர மாற்றத்தின் முக்கிய காரணம் பிக் பாஸ் சீசன் 7 எனவும் சொல்லப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக் பாஸ் சீசன் 7 விஜய் டிவியில் டெலிகாஸ்ட் ஆகி வருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பதால், இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் நேரம் மாற்ற காரணமாக இருக்கலாம் என இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று அல்லது நாளைய எபிசோடில் வேல ராமூர்த்தி என்ட்ரி இருக்கும் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில் இனிமே சீரியல் 30 நிமிடத்திற்கு முன்பே ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுப்போன்ற சின்னத்திரை தொடர்பான பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Instagram
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]