பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. கன்னடத்தில் இருந்து சில மாற்றங்களுடன் ரீமேக் செய்தார் பி.வாசு. வசூலில் மாபெரும் சாதனை செய்தது சந்திரமுகி. அதிக நாட்கள் தியேட்டரில் ஓடிய படம் என்ற பெயரையும் பெற்றது. குறிப்பாக இதில் ஜோதிகா நடிப்பை இன்று வரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தின் 2வது பாகத்தை எடுக்க பி.வாசு முடிவெடுத்தார். அதன் படி ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் கங்கனா ரணாவத், லட்சுமி மேனன், மகிமா நம்பியார், ராதிகா,வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சந்திரமுகி 2 கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றிருப்பதால் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோஸ்தர்கள் ஹேப்பி. குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்பதால் விடுமுறை தினங்களில் குடும்பங்கள் தியேட்டருக்கு படையெடுக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.
அதன் படி சந்திரமுகி 2 ஓடிடி உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான பல சூப்பர் ஹிட் படங்கள் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தன. 3 வாரங்களுக்கு முன்பு வெளியான மலையாள படமான ஆர்.டி.எக்ஸ் தற்போது வரை ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தையும் நெட்ஃபிளிக்ஸ் வாங்கி இருப்பதாக தெரிகிறது. அதன்படி அடுத்த மாதம் சந்திரமுகி 2 நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
நவம்பர் மாதம் 10ஆம் தேதிக்கு மேல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் சந்திரமுகி 2 வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்கு மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]