herzindagi
sugar cane uses

கர்ப்பிணிகள் கரும்பு சாப்பிடலாமா? சாப்பிடக் கூடாதா?

கர்ப்ப காலத்தில் கரும்பின் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி படித்தறியுங்கள்.
Editorial
Updated:- 2023-01-11, 14:38 IST

கர்ப்பிணிகளுக்கு பல்வேறு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, உண்டாகும் வித்தியாசமான உணவு தேடல் என்பது பொதுவான ஒன்றே. கர்ப்ப காலத்தில் எதைச் சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது என்பதை முடிவெடுத்தே உண்போம். அவ்வகையில் கரும்பு அல்லது கரும்பு சாறு சாப்பிடலாமா, கூடாதா என்பது குறித்த தகவல்களை இந்த கட்டுரை உங்களுக்கு வழங்குகிறது.

sugar cane

கர்ப்ப காலத்தில் கரும்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மலச்சிக்கலை தீர்க்கும்

பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் மலச்சிக்கலால் அவதிப்படுகிறார்கள். கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து இருக்கிறது, எனவே இது மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது.

இதுவும் உதவலாம்: கர்ப்பிணிகள் சொல்ல வேண்டிய சிறந்த மந்திரம் எது தெரியுமா?

தொற்றுக்களை விரட்டுகிறது

கரும்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டு இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாகும். சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று, சிறுநீரக கற்கள் மற்றும் மஞ்சள் காமாலை ஆகிய வியாதிகளுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும்.

sugar cane

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

கர்ப்பிணி பெண்கள் மிகவும் பலவீனமாகவும் மற்றும் சோர்வாகவும் உணர்வார்கள். கரும்பு சாறு குடித்தால், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், கல்லீரல் சிறப்பாக செயல்படும். பிலிருபின் சரியான அளவில் இருக்க உதவும்.

முக்கிய குறிப்புகள்

  • கர்ப்ப காலத்தில் கரும்பு அல்லது கரும்பு சாறு அதிகம் உட்கொள்ள கூடாது.
  • கரும்பு அல்லது கரும்பு சாறை பகலில் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மாலை நேரத்தில் எடுத்து கொண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் உண்டாகும்.
  • உங்களுக்கு நீரிழிவு நோய் அல்லது கர்ப்ப கால நீரிழிவு நோய் இருந்தால் கண்டிப்பாக கரும்பு உட்கொள்ள கூடாது.

sugar cane

கரும்பு சாறு கருச்சிதைவை உண்டாக்குமா?

கரும்பு சாறு ஒரு போதும் கருச்சிதைவை உண்டாக்காது. ஆனால் கர்ப்ப கால நீரிழிவு நோய் உள்ளவர்கள், இந்த பானத்தை தவிர்க்க வேண்டும். இந்த பானம் இரத்தத்தில் உள்ள குளூகோஸ் அளவை அதிகரித்து, கர்ப்ப கால சிக்கல்களான குறைபிரசவம் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தி விடும்.

இதுவும் உதவலாம்:கர்ப்ப காலத்தில் முட்டை சாப்பிடலாமா?

குறிப்பு: உங்கள் உடல் நிலை குறித்து மகப்பேரு மருத்துவரிடம் ஆலோசித்து அவர்கள் பரிந்துரைப்படி கரும்பு அல்லது கரும்பு சாற்றை உட்கொள்ளுங்கள்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்

Image Credit: Free Pik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]